2010 ஆம் ஆண்டு இயக்குனராக தனது பயணத்தை தொடங்கிய RK வித்யாதரன், தற்போது மாணவர்கள் மற்றும் அவர்களின் உலகத்தை மையப்படுத்தி ‘School’ என்ற புதிய படத்தை படைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் ட்ரைலரை மேஸ்ட்ரோ இளையராஜா தனது YouTube பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
‘School’ – ட்ரைலர்
தனியார் பள்ளியில் அமானுஷ்யமான சக்திகள் உலவுவதை அங்கிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உணருகின்றனர். அதற்கு மாந்திரீக ரீதியாக தீர்வு காண நினைத்தாலும் மறுபுறம் அங்கு தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் பின்னணி குறித்தும் விசாரிக்கின்றனர். நீட் தேர்வு, அதற்காக மேற்கொள்ளும் முயற்சி, முயற்சி செய்யும் போது மாணவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் ஏற்ற தாழ்வுகள், ஜாதி மதம் அடிப்படையில் மாணவர்களுக்கு மத்தியில் உருவாக்கப்படும் பிரிவினைவாதம் என தற்போது சமூகத்தில் நிகழ்ந்து வரும் நிகழ்வுகளை மையப்படுத்தி அமானுஷ்யங்கள் நிறைந்த ஆழமான உளவியல் படமாக உருவாகியுள்ளது.
‘School’ – படக்குழு
நடிகர்கள் | யோகி பாபு, பூமிகா, KS ரவிக்குமார், நிழல்கள் ரவி, பிரியங்கா வெங்கடேஷ் |
இயக்குனர் | RK வித்யாதரன் |
இசை & பாடலாசிரியர் | இளையராஜா |
தயாரிப்பு | Quantum Film Factory |
வெளியாகும் நாள் | TBA |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]