கவிஞரும், திரைப்பட இயக்குனருமான சீனு ராமசாமி தன்னுடைய மனைவி தர்ஷனா அவர்களுடனான 17 வருட திருமண பந்தத்தை விவாகரத்து வாயிலாக முறித்துள்ளதாக அறிவித்துள்ளார். தன்னுடைய X தளத்தில் இயக்குனர் சீனு ராமசாமி பதிவிட்டுள்ள பதிவில் இவர்களின் விவகாரத்தி பற்றி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அறிவிப்பு
— Seenu Ramasamy (@seenuramasamy) December 11, 2024
…………………
அன்பானவர்களுக்கு வணக்கம்
நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்.
இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது…
இன்று (12 டிசம்பர்) காலை பதிவில் சீனு ராமசாமி அறிவித்ததாவது, “அன்பானவர்களுக்கு வணக்கம் நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். Messages Grok இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன்.அவரும் அறிவார். Communities Profile இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம்.
Seenu Ramasamy -யின் மற்றுமொரு படைப்பு ” கோழிப்பண்ணை செல்லதுரை”…
மேலும் இருவரின் தனிப்பட்ட இந்த விவாகரத்து முடிவுக்கு அனைவரும் மதிப்பளித்து அவர்களின் வருங்காலத்திற்கு வாழ்த்துக்களை வழங்க கேட்டுக்கொண்டுள்ளார். இவர்களின் விவாகரத்து நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், விவாகரத்து வழங்கப்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை. மேலும் இவரின் அறிவிப்பு 2024 ல் பல தமிழ் சினிமா பிரபலங்களின் விவகாரங்களுடன் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.