2024 செப்டம்பர் நடிகர் விஜய், கார்த்தி, ஹரிஷ் கல்யாண் என பல பிரபல ஹீரோக்களின் படங்கள் வரிசையாக வெளியாக காத்துக்கொண்டிருக்கிறது. ரசிகர்களின் காத்திருப்பின் பலனாக வரும் மாதத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் என்னென்ன வெளியாகிறது என்ற பட்டியல்.
The Greatest of All Time (செப்டம்பர் 5)

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், டாப் ஸ்டார் பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுதரி என பலர் நடிக்கும் படம் ‘The Greatest of All Time’. 2024ன் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு பேசப்படும் படங்களில் த்வாரமல் இடம்பிடித்துள்ள படம் இது. நடிகர் விஜய் அரசியலில் இறங்கியதால் இனிமேல் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் எனக் கூறியதால் ரசிகர்கள் அவரின் 68வது படமான ‘The Greatest of All Time’ படத்தை பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த படத்தின் அனைத்து தகவலால் வெளியான உடனே இணையதளத்தில் வைரலானது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஒரு scientific fiction படமாக உருவாகியுள்ளது இந்த படம்.
தோனிமா (செப்டம்பர் 20)

காலி வெங்கட், ரோஷினி பிரகாஷ் நடிப்பில் எளிமையான கதைக்களத்தில் உருவாகியுள்ள படம் ‘தோனிமா’. இதற்கு முன் சிகை, பக்ரீத் ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குனர் ஜெகதீசன் சுப்பு இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏழ்மையான குடும்பத்தை நடத்தி வரும் காலி வெங்கட், கட்டிட வேலைக்கு சென்று பாதி பணத்தை குடிப்பழக்கத்துக்கில் செலவிடுகிறார். அவரின் மனைவியாக நடிக்கும் ரோஷினி வீட்டு வேலை செய்து காத்து கேட்க சிரமப்படும் தன மகனின் சிகிச்சைக்காக அயராது உழைத்துவருகிறார். அவர்களுக்கு குப்பைத்தொட்டியில் ஒரு Golden Retriever நாய்குட்டி கிடைக்க அதை எடுத்து வளர்ப்பது தான் கதை. அந்த நாய்க்கு கிரிக்கெட் வீரர் தோனியின் பெயரான ‘தோனிமா’ என பெயர் வைப்பது தான் படத்தின் பெயர்.
கோழிப்பண்ணை செல்லத்துரை (செப்டம்பர் 20)

இயக்குனர் சீனு ராமசாமி மீண்டும் கிராமத்து பின்னணியில் இயக்கம் படம் தான் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’. யோகி பாபு, ஏகன், பிரிகிடா சகா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு Feel Good படமாக தெரிகிறது. விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் உருக்கமான கருதும், கிராமத்து கதைக்கே உரித்தான அழகியலும் இருக்கிறது. படத்தின் டீசரில் என். ஆர். ரகுநந்தனின் இசையில் பின்னணி இசை மனதை வருடுகிறது.
Yogi Babu உடன் ஜோடி சேர்ந்த லட்சுமி மேனன், அடுத்தடுத்த அப்டேட்கள்…
லப்பர் பந்து (செப்டம்பர் 20)

ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா, சஞ்சனா நடிப்பில் கிரிக்கெட் கதைக்களத்தில் உருவாகும் ஒரு காதல் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது ‘லப்பர் பந்து‘. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையில் வெளியாக தயாராகவுள்ள படம் செப்டம்பர் வெளியாகிறது. பிரின்ஸ் பிச்சர்ஸ் தயாரிப்பில், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது ‘லப்பர் பந்து’.
நந்தன் (செப்டம்பர் 20)
#Nandhan releasing in theatres on September 20th #NandhanFromSep20 @erasaravanan film
— M.Sasikumar (@SasikumarDir) August 28, 2024
Music by @GhibranVaibodha @thondankani #BalajiSakthivel @suruthisamy8 @saranRV1 @EraEntertain @proyuvraaj pic.twitter.com/IW0lWBKMSU
நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் ‘நந்தன்’ படத்தை இயக்குகிறார் இரா. சரவணன் இயக்கத்தில் வெளியாகவுள்ள படத்தை இரா என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் மற்றும் சுருதி பெரியசாமி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் பலரும் பகிர்ந்தார். கோவமான ஒரு பாத்திரத்தில் நடிகர் சசிகுமார் உடைய க்ளோஸ் அப் புகைப்படமும் படப்பிடிப்பு தலத்தில் எடுத்த புகைப்படமும் இணையதளத்தில் பகிரப்பட்டது.
சட்டம் என் கையில் (செப்டம்பர் 20)

நகைச்சுவை நடிகர் சதிஷ் ஹீரோவாக நடிக்கும் ‘சட்டம் என் கையில்’ படத்தை இளம் இயக்குனர் சசி இயக்குகிறார். இவர் இதற்கு முன்பாக நடிகர் வைபவ் நடித்த ‘சிக்ஸர்’ படத்தை இயக்கினார். சண்முகம் கிரியேஷன்ஸ், சீட்ஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இந்த படமும் ஒரு காமெடி படமாக அமையும்.
தோழர் சேகுவேரா (செப்டம்பர் 20)

அலெக்ஸ் ஏ.டி இயக்கத்தில் சத்தியராஜ், மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத், கூல் சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘தோழர் சேகுவேரா’. கிரே மேஜிக் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
மெய்யழகன் (செப்டம்பர் 27)

நடிகர் கார்த்தி, அரவிந்த் சுவாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் நடிப்பில் ஜல்லிக்கட்டு சார்ந்த படத்தை இயக்கியுள்ளார் சி.பிரேம் குமார். சூரியா மற்றும் ஜோதிகா இணைந்து 2D தயாரிப்பு நிறுவனம் தாயரிக்கும் இந்த படத்துக்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]