Home Cinema News தமிழ் சினிமாவில் கதை திருட்டு – இயக்குனர் Shankar குற்றச்சாட்டு! 

தமிழ் சினிமாவில் கதை திருட்டு – இயக்குனர் Shankar குற்றச்சாட்டு! 

'வேல் பாரி' புதினத்தின் கதையில் இருந்து பல காட்சிகளை Copy அடித்து சமீபத்தில் ஒரு முன்னோட்டம் வெளியாகியுள்ளத்துக்கு இயக்குனர் சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

by Vinodhini Kumar

‘இந்த படத்தின் கதை என்னுடையது’ என்றும் ‘இந்த இயக்குனர் என்னுடைய கதையை திருடியுள்ளார்’ என பல முறை தமிழ் சினிமாவில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது தெரிந்தது தான். சமீபத்தில் வெளியான ‘Devara’ திரைப்படத்தின் முன்னோட்டத்தில் கதை திருட்டு ஏற்பட்டுள்ளதாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் Shankar குற்றம் சாட்டியுள்ளார்.  

இயக்குனர் Shankar நேற்று தன்னுடைய X தளத்தில் ஒரு பரபரப்பான பதிவை வெளியிட்டார். அதில் “தமிழ் நாவலான “வீர யுக நாயகன் வேல் பாரி”, பல திரைப்படங்களில் அனுமதியின்றி முக்கிய காட்சிகள் கிழிக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதைக் கண்டு கலங்கினேன். சமீபத்திய திரைப்பட ட்ரெய்லரில் நாவலின் முக்கியமான காட்சியைப் பார்த்ததில் மிகவும் வருத்தமாக இருந்தது” எனப் பதிவிட்டுள்ளார். 

சமீபத்தில் வெளியான படங்களின் ட்ரைலரில் உள்ள காட்சிகள் சு. வெங்கடேசனின் ‘வீர யுக நாயகன் வேல் பாரி’ நாவலின் கதையில் இருந்து எடுத்துள்ளதாகவும், இந்த கதைக்கான பதிப்புரிமை அதாவது Copyrights, இயக்குனர் சங்கரிடம் உள்ளது. இந்த நாவலை திரைப்படமாக எடுக்க அவர் இந்த பதிப்புரிமையை வங்கியுள்ளதும், அதனால் படங்கள், web seriesகளில் பயன்படுத்த கூடாது என அவர் பதிவிட்டுள்ளார். 

பிரமாண்ட இயக்குனர் Shankar-ன் அடுத்த​ 3 படங்களின் கதை ரெடி!

சாகித்ய அகாதமி விருது வென்றுள்ள எழுத்தாளர் சு. வெங்கடேசன், ஆனந்த விகடன் இதழில் ‘வீர யுக நாயகன் வேல் பாரி’ என்ற கதையை பல வருடங்களாக எழுதிவந்தார். இதை ஒரு நாவலாக விகடன் குழுமம் வெளியிட்டதை அடுத்து, இயக்குனர் Shankar இதன் உரிமையை வாங்கியுள்ளார். 

Shankar accuses Devara crew of copyright

சமீபத்தில் ‘வீர யுக நாயகன் வேல் பாரி’ கதைக்கு ஒத்த காட்சிகளை கொண்ட படங்கள் ‘Devara’ மற்றும் ‘Kanguva’ படங்கள் தான். முக்கியமாக ‘Devara’ படத்தில் வருவதை போன்ற கடல் கொள்ளையர்களை மீனவ மக்கள் எதிர்ப்பதும், கடலோர பழங்குடி மக்கள் இணைந்து அவர்களை எதிர்ப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

Copyright பிரச்சனைகளை தவிர்ப்பது எப்படி? 

திரைப்படங்களுக்கு கதை எழுதும்போது, அதை வேறு யாரும் படமாக மாற்றக்கூடாது என்றால் அதை உடனடியாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் (SIFWA) பதிவு செய்தால் இந்த மாதிரியான சிக்கல்களை தவிர்க்கலாம். 

வெளிப்படையாகவும், ஆழமாகவும் அரசியல் பேசும் இயக்குனர் Shankar படங்கள்

இது போல் பல பிரபல படங்களுக்கு Copyright சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. 1960கள் முதல் படங்களில் கதை திருட்டு என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துவருகிறது. ‘வியட்நாம் வீடு’, ‘எந்திரன்’, ‘சர்கார்’, ‘கத்தி’, ‘விவேகம்’, ’96’, ‘கோமாளி’ ஆகிய படங்களுக்கு கூட இப்படியான Copyright பிரச்சனைகள் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.