கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தல’ அஜித் கைவசம் ‘விடாமுயற்சி, குட் பேட் அக்லி‘ என இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘விடாமுயற்சி’ படத்தை இயக்குநர் மகிழ் திருமேனியும், ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் இயக்குகிறார்கள்.
Thala Ajith’ன் முதல் மாஸ் ஹிட்… Vaali பற்றிய 25 தகவல்கள்!
தற்போது, ‘விடாமுயற்சி’ படத்தின் கார் சேஸிங் காட்சியை படமாக்கும்போது நடிகர்கள் அஜித் மற்றும் ‘பிக் பாஸ்’ புகழ் ஆரவ் சென்ற கார் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ஏ தங்களது எக்ஸ் தளத்தில் தெரிவித்ததுடன், விபத்து நடந்தபோது எடுத்த வீடியோ பதிவுகளையும் வெளியிட்டுள்ளது.
Bravery knows no bounds! 💪 Witness Ajith Kumar's fearless dedication as he takes on a daring stunt sequence in #VidaaMuyarchi without any stunt double. 🫡 🔥#AjithKumar pic.twitter.com/62NyEG4cvG
— Lyca Productions (@LycaProductions) April 4, 2024
இவ்வீடியோ பதிவுகளை பார்த்த அஜித் ரசிகர்கள் ஷாக்காகி விட்டனர். இந்த விபத்து கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் அஜர்பைஜான் ஷெட்யூலின் போது ஏற்பட்டதாம். தனது ஒவ்வொரு படங்களின் ஸ்டன்ட் காட்சிகளை படமாக்கும்போதும், நடிகர் அஜித் தொடர்ந்து இதுபோன்ற ரிஸ்க் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு 2K கிட்ஸின் ஃபேவரைட் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். மிக விரைவில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]