Home Cinema News சித்தார்த்40 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!

சித்தார்த்40 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!

நடிகர் சித்தார்த் உடைய 40வது படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பட்டியல் வெளியாகியுள்ளது.

by Vinodhini Kumar

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துவருகிறார் நடிகர் சித்தார்த். சமீபத்தில் வெளியான ‘இந்தியன் 2’ படத்தில் நடித்த சித்தார்த், தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அடுத்ததாக மாதவன், நயன்தாரா நடிக்கும் ‘Test’ படத்தில் நடித்துவரும் சித்தார்த், இந்தியன் 3ம் பாகத்திலும் நடிக்கிறார்.

இதை தோடர்ந்து, அவரின் 40வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இந்த படத்திற் இயக்குகிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க, இந்த படத்தில் நடிகர் சரத்குமார், நடிகை தேவயானி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சூரியவம்சம் பட ஜோடியை மறுபடியும் திரையில் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

Good Night‘, ‘முதல் நீ முடிவும் நீ’ படங்களில் நடித்த மீதா ரகுநாதன் இந்த படத்தில் இணைகிறார். கன்னட நடிகை சைத்ரா அச்சர் தமிழில் இந்த படம் மூலம் அறிமுகமாகிறார். பெயரிடப்படாத இந்த படத்தின் அறிவிப்பு மே மாதம் வந்தது குறிப்பிடத்தக்கது. ‘8 தோட்டாக்கள்’ படத்திற்கு பின் ஸ்ரீ கணேஷ் ஒரு வெற்றி படத்தின் தேடலில் உள்ளார். இந்த படம் அதற்கு விடையாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஒரு universal கதையாக, அனைவராலும் ஏத்துக்கொள்ளகூடிய கதையாக உருவாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சித்தார்த் 40 cast

சித்தார்த் 40 படத்தின் பூஜை இன்று நடந்நதது. இயக்குனர் ராம் மற்றும் மோகன் ராஜா இதில் கலந்துக்கொண்டு படப்பிடிப்பை தொடக்கிவைத்தார்கள். படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழு பூஜை நடந்த புகைப்படத்தை வலைதளத்தில் பகிர்ந்தார்கள். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.