Home Cinema News  “நிச்சயதார்த்தம் முடிந்தது”… இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த சித்தார்த் – அதிதி ராவ்!

 “நிச்சயதார்த்தம் முடிந்தது”… இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த சித்தார்த் – அதிதி ராவ்!

by John Kamalesh

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலுமே மிக பிரபலமான நடிகர் சித்தார்த். இவர் நடித்து கடந்த ஆண்டு (2023) தமிழில் வெளியான ‘சித்தா’ திரைப்படம் ரசிகர்கள், பத்திரிக்கையாளர்கள் மட்டுமின்றி, பல திரையுலக பிரபலங்களும் பாராட்டி சூப்பர் ஹிட்டானது.

Snapinsta.app 434728986 2189084318104020 1163794025395299511 n 1080

இந்த படத்தை ‘சேதுபதி’ புகழ் அருண் குமார் இயக்கியிருந்தார், இதில் ஹீரோயினாக நிமிஷா சஜயன் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு சித்தார்த் கைவசம் ‘டெஸ்ட், இந்தியன் 2‘ என இரண்டு தமிழ் படங்கள் மட்டுமே இருக்கிறது. 

சித்தார்த் நடிப்பில் 2021-ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான படம் ‘மஹா சமுத்திரம்’. இதில் சித்தார்த்திற்கு ஜோடியாக ‘காற்று வெளியிடை’ புகழ் அதிதி ராவ் டூயட் பாடி ஆடியிருந்தார். இந்த படம் வெளியானதிலிருந்தே இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. 

இந்நிலையில், நேற்று சித்தார்த்திற்கும் – அதிதி ராவ்விற்கும் திருமணம் நடைபெற்றதாக தகவல் பரவியது. தற்போது, சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “அதிதி ராவ் யெஸ் சொல்லிவிட்டார். நிச்சயதார்த்தம் முடிந்தது” என்று பதிவிட்டுள்ளார். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.