தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் என்று அழைக்கப்படும் SIIMA 2024 விருதுகள் நிகழ்ச்சியின் 12 வது edition இந்த ஆண்டு துபாயில் செப்டம்பர் 14 & 15 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு பல பிரிவுகளில் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
மிகவும் முக்கியமான பிரிவுகள், சிறந்த படம் 2023-ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளியான “ஜெயிலர்” திரைப்படத்திற்கும், சிறந்த இயக்குனருக்கான விருது இயக்குனர் நெல்சன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் என இருவருக்கும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் come back படமாக அமைந்தது. இந்த படத்தில் நடித்த நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு மிகப்பெரிய பலமாக இருந்தது. அனிருத் அவர்கள் இசை இந்த படத்தின் இதயமாக செயல் பட்டது என்று விமர்சகர்கள் கூறினார்.
சிறந்த நடிகருக்கான விருதை “பொன்னியின் செல்வன் – 1, 2” திரைப்படத்தில் நடித்த சியான் விக்ரம் பெற்றுள்ளார்.
சிறந்த நடிகையாக “அன்னபூரணி” திரைப்படத்தில் நடித்த லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விருது (பிரிவு) | விருது வென்ற நடிகர்/நடிகை | திரைப்படத்தின் பெயர் |
சிறந்த படம் | ஜெயிலர் (Jailer) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் | ஜெயிலர் (Jailer) |
சிறந்த இயக்குனர் | நெல்சன் திலீப்குமார் | ஜெயிலர் (Jailer) |
சிறந்த நடிகை | நயன்தாரா | அன்னபூரணி (Annapoorani) |
சிறந்த நடிகர் | விக்ரம் | பொன்னியின் செல்வன் – 2 (PS 2) |
சிறந்த துணை நடிகர் | வசந்த் ரவி | ஜெயிலர் (Jailer) |
சிறந்த துணை நடிகை | சரிதா | மாவீரன் (Maaveeran) |
சிறந்த பாடலாசிரியர் | விக்னேஷ் சிவன் | ஜெயிலர் (Jailer)பாடல் – “ரத்தமாரே” |
சிறந்த பின்னணி பாடகர் (male) | ஷான் ரோல்டன் | குட் நைட் “நான் காலி” – பாடல் |
சிறந்த வில்லன் | அர்ஜுன் சார்ஜா | லியோ (Leo) |
சிறந்த அறிமுக இயக்குனர் | விக்னேஷ் ராஜா | போர் தொழில் (Por Thozhil) |
Extraordinary Performer of the Year | S.J.சூர்யா | Mark Antony, ஜிகர்தண்டா Double X, பொம்மை |
சிறந்த அறிமுக நடிகர் | ஹிரித்து ஹாரூன் | தக்ஸ் (Thugs) |
சிறந்த அறிமுக நடிகை | ப்ரீத்தி அஞ்சு அஸ்ராணி | அயோத்தி (Ayothi) |
சிறந்த ஒளிப்பதிவாளர் | தேனி ஈஸ்வர் | மாமன்னன் (Maamannan) |
சிறந்த நகைச்சுவை நடிகர்/நடிகை | யோகி பாபு | ஜெயிலர் (Jailer) |
சிறந்த நடிகர் (Critics) | சிவகார்த்திகேயன் | மாவீரன் (Maaveeran) |
சிறந்த நடிகை (Critics) | ஐஸ்வர்யா ராய் | பொன்னியின் செல்வன் – 2 (PS 2) |
சிறந்த இயக்குனர் (Critics) | சு.அருண்குமார் | சித்தா (Chiththa) |
சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர் | கவின் | டாடா (DADA) |
சிறந்த வளர்ந்து வரும் தயாரிப்பாளர் | திட்டக்குடி கண்ணன் ரவி | ராவண கோட்டம் (Raavana Kottam) |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]