Home Cinema News Simbu-விற்கு மாறி மாறி வரும் பிரச்சினைகள், தயாரிப்பாளருடன் புதிய சலசலப்பு.

Simbu-விற்கு மாறி மாறி வரும் பிரச்சினைகள், தயாரிப்பாளருடன் புதிய சலசலப்பு.

நடிகர் Simbu திரைதுதறையில் பல பிரச்சனைகளில் சிக்கியுள்ளார். சில வருடங்களாக எந்தவித பெரிய சர்ச்சையிலும் மாட்டாமல் வெற்றிகரமாக நடித்து வந்தார். 

by Vinodhini Kumar

நடிகர் Simbu திரைதுதறையில் பல பிரச்சனைகளில் சிக்கியுள்ளார். சில வருடங்களாக எந்தவித பெரிய சர்ச்சையிலும் மாட்டாமல் வெற்றிகரமாக நடித்து வந்தார். 

Pathu thala Simbu poster

Simbu-விற்கு சமீபத்தில் வசூல் வேட்டையாகவும் மிரட்டலான நடிப்பிற்காகவும் பெரிதும் பேசப்பட்ட படங்கள் ‘பத்து தல’ மற்றும் ‘வெந்து தணிந்தது காடு’. இதன் வெற்றியை மனதில் வைத்து அடுத்த கூட்டணியாக நடிகர் Simbu-வை வைத்து ‘கொரோனா குமார்’ என்ற படத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தார் தயாரிப்பாளர் ஐஷிரி கணேஷ். கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் இந்த படத்தை வேல்ஸ் நிறுவனர் ஐஷிரி கணேஷ் தயாரிக்க முடிவாகி இருந்தது. 

முன்பணம் பெற்று நடிக்காமல் போனதால் இந்த பிரச்சனையை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் குற்றச்சாட்டாக வைத்துள்ளார் தயாரிப்பாளர் ஐஷிரி கணேஷ். இதனை தொடர்ந்து இந்த பிரச்சினை முடியும் வரை நடிகர் சிம்பு வேறு எந்த படத்திலும் நடிக்க கூடாது என ரெட் நோட்டிஸ் வழங்க கூறியுள்ளார். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பிரச்சினை பற்றி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடக்க, மற்றொரு பக்கம் நடிகர் சிம்பு, ‘STR 48’என்ற படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி உடன் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகி கீர்த்தி சுரேஷ் என்றும் படத்தின் ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கி படப்பிடிப்பு மட்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வந்துள்ளது. 

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் பிரம்மாண்ட படமான Thug Life-லும் இணைந்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த படத்தின் கால்ஷீட் முடிந்த பின்னர் ‘STR48’-ன் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார் நடிகர் சிம்பு. இது போல பல கால்ஷீட் பிரச்சனைகளை சமாலித்த நடிகர் சிம்பு தயாரிப்பாளர் சங்கத்தின் ரெட் நோட்டிஸை கண்டுகொள்ளாமல் தனது அடுத்தடுத்த பட வேலைகளில் ஈடுபட்டு வருவது புதியதல்ல. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.