மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன், ஜெயம்ரவி, திர்ஷா உள்ளிட்ட திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள படம் Thug Life. இந்த படம் கமலஹாசன்னின் 234 ஆவது திரைப்படமாகும். தக் லைப் திரைபடத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை மெட்ராஸ் டல்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவீஸ் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் மூவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

நாயகன் படத்திற்கு பிறகு கமலஹாசனும் மணிரத்னமும் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகின்றனர். இந்த படம் மிகவும் எதிர்பார்ப்புடன் பேசப்படுகிறது. 1987 ல் வெளிவந்த நாயகன் படத்துடன் இந்த படன் தொடர்புடையது போன்று இப்படத்தின் வசனங்களும் தெரிவிக்கின்றனர். இந்த நாயகன் படம் ஒரு கேங்ஸ்டார் மூவி என்பது நமக்கு தெரிந்ததே. மிகப்பெரிய அளவில் ஒரு ஹிட் அடித்த படம் தான் நாயகன். இந்த படத்தில் கமலஹாசனின் பெயர் சக்திவேல் நாயக்கர் அதே போல் தக் லைப் படத்திலும் டீசர் வெளியானதில் கமலஹாசன் அவர்கள் தன்பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்று சொல்வது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் “என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கர் நியாபகம் வெச்சுகோங்க” என்று சொல்வது மேலும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் தக் லைப் என்று மற்றவரை கேலி செய்யும் வகையில் அவர்களுக்கு ஒரு கண்ணாடி, செயின் மற்றும் சுருட்டு போன்றவற்றை போட்டு சிரிக்க வைப்பது இப்போது கூட டிரண்டிங் ஆக போய்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் பெயரை கமல் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதும் நமக்கு தெரிந்ததே.
இதையெல்லாம் மீறியது தான் கமலில் உடல் தோற்றம் மற்றும் உடை வடிவமைப்பு. இத்திரைப்படத்தில் கமலஹாசன் நீளமான முடியுடன் அழுக்கு துணியுடன் சண்டை காட்சிகளும் வசனங்களும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகின்றது.
இந்த படத்திற்கு ஒரு முக்கிய கதாபாத்திரமாக கதாநாயகர் துல்கர் சல்மான் நடிக்க இருந்தார். பின்பு அவர்களுக்கு டேட் கிடைக்கவில்லை என்பதற்காக நடிகர் சிம்புவை மாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. மாபெரும் நட்சத்திர பட்டாளங்கள் இணையும் இந்த படம் ஒரு சில எதிர்பார்ப்புகள் மற்றும் பல ரகசியங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ரசிகர்கள் அனைவரும் பிரமிக்க ஆவலுடன் உள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]