தமிழ் சினிமாவில் ஏறத்தாழ 29 ஆண்டுகள் பிரபல நாயகியாக, அணைத்து முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றியவர் நடிகை சிம்ரன். இவரின் நடிப்பு மற்றும் நடனத்துக்காக இன்றளவும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

சமிபத்தில் அதிகாரபூர்வமற்ற நபர்கள் நடிகை சிம்ரன் மீது வாய்ப்புக்காக ஒரு முன்னணி நடிகரிடம் கோரிக்கை வைத்ததாகவும், அந்த நடிகர் மறுத்துவிட்டதாகவும் பேசியது இணையத்தில் பரவியது. இந்த செய்தியை பற்றி நடிகை சிம்ரன் அறிந்த பின், சில நாட்கள் பொறுத்து இறந்ததாகவும், ஆனால் இப்போது வெளிப்படையாக பேசியுள்ளார்.
My most memorable movie with @actorvijay #ThullathaManamumThullum turns 23 🤩 Thanks to #Ezhil and team for this wonderful opportunity ❣️#23YearsofThullathaManamumThullum #Vijay pic.twitter.com/8G8lHf8Er5
— Simran (@SimranbaggaOffc) January 29, 2022
சினிமாவில் பல நடிகர்களை போல் நடிகை சிம்ரனும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இதையடுத்து சில ஆண்டுகள் சினிமாவில் அவர் நடித்த படங்கள் பெருமளவில் வெற்றியடையாமல் இருந்தது. இருப்பினும் ‘பேட்ட’ படத்தின்முலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய இரண்டாவது பயணத்தை தொடங்கினார் நடிகை சிம்ரன்.
You Tube ல் சில சினிமா விமர்சகர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பெரிய ஹீரோக்களின் படங்கள் பற்றியும் அதனால் ஏற்படும் வாய்ப்புகள் பற்றியும் பேசியபோது, நடிகை சிம்ரன் சினிமாவில் நல்ல வசூல் செய்ய தன்னுடைய சக நடிகரும் முன்னணி நடிகருமான நடிகர் விஜய்யிடம் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து ஒரு படம் செய்யும் படி கேட்டதாகவும், அதற்கு நடிகர் விஜய் மறுப்பு தெரிவித்ததாகவும் பேசியுள்ளனர்.
It's truly disheartening to see how people can emotionally manipulate you and how little your friends seem to care about it. Up until now, I’ve stayed quiet, but let me make it clear: I’m not desperate to line up and work with any big heroes. I've been there and done that. My…
— Simran (@SimranbaggaOffc) September 21, 2024
இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வர, நடிகை சிம்ரன் பொருத்தும் பொது என வெளிப்படையாக தன்னுடைய கருத்தை X தலத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் ” இன்றைய மக்களை எப்படியெல்லாம் ஏமாற்ற முடியும் என்பதையும், அப்படியான கருத்துக்களை கேட்டும் எப்படி உங்களின் நண்பர்கள் கூட அமைதியாக இருப்பார்கள் என்பது வருத்தத்திற்குரியதாக உள்ளது” என பதிவிட்டார்.
மேலும் தான் எந்தவிதமான வாய்ப்புகளையும் ,தேடவில்லை என்றும், “நான் எந்த பெரிய ஹீரோக்களுடனும் வரிசையாக நடிக்க ஆசைப்படவில்லை” என பதிவிட்டுள்ளார். நான் சாதிக்க நினைத்ததை சாதித்து விட்டேன், இதோடு இப்படியான செய்திகளை நிறுத்துங்கள் எனவும் கண்டிப்பாக கூறியுள்ளார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]