கடைசி மூச்சு வரை இசையால் அனைவரையும் மகிழ்வித்த பாடகி பவதாரிணி.

தமிழ் திரை ரசிகர்களை தன்னுடைய இசையால் உயிர்ப்பித்து வருபவர் இசைஞானி இளையராஜா. அவரின் மகள் Bhavatharini தந்தைக்கு இணையாக தன்னுடைய இனிமையான, காந்த குறலில் இசை பிரியர்களை கட்டி போட்டவர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி பாடகி பவதாரிணி உடல்நல் குறைவால் காலமானார்.
தேசிய விருது பெற்ற பாடகி பவதாரிணி சினிமா துறையில் தனக்கென தனி இடத்தை விட்டு சென்றுள்ளார். பவதாரிணி சினிமா துறையில் காட்டிய அன்பும் பண்பும் பற்றி அனைவரும் அறிந்ததே. இதை தொடர்ந்து அவர் இறப்பதற்கு முன் கூட ஒரு நல்ல நோக்கத்திற்காக தன்னுடைய சொந்த இசையில் மெட்டமைத்து ஒரு பாடலை அமைத்து இருந்தார். அந்த பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழர்களின் பெருமை அய்யா இசைஞானி @ilaiyaraaja அவர்களை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) May 16, 2024
பெண் கல்வியையும், பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக @tnschoolsedu-ஆல் ‘பெண்-கல்வி, உரிமைகள், விடுதலை’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டது. அப்பாடல் உருவாக்கத்தில் சகோதரி… pic.twitter.com/46jMqaNghF
தமிழ்நாடு கல்வி துறையில் பெண் பிள்ளைகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இதை பவதாரிணி அவர்களே இசை அமைத்து பாடவும் செய்துள்ளார். பெண்களை போற்றி, அவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் இருக்கும் பாடலை பாடலாசிரியர் சுகிர்தராணி எழுச்சி பொங்க எழுதியுள்ளார். “பெண் என்பவள் நீரும் ஆணவள்” என தொடங்கும் பாடல் பெண் கல்வி, பெண் உரிமைகள், பெண் சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வு பாடல்
இதை தமிழ் நாடு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன்னுடைய ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பாடலின் வெளியீட்டுக்கு முன் இசைஞானி இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அந்த புகைப்படங்களை பாடலுடன் தனது வலைதளத்தில் பதிவிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. பாடகி பவதாரிணி. தன்னுடைய தேனிசையால் இன்னும் வாழ்ந்து வருவதும் மற்றொரு முறை அவரின் குரல் ஒலிப்பதும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]