Home Cinema News Chinmayi – Rahul விவாகரத்து செய்யப்போகிறார்களா?!

Chinmayi – Rahul விவாகரத்து செய்யப்போகிறார்களா?!

Tamil cinema செய்தி உலகில் இந்த வார ஹாட் டாபிக் ‘விவாகரத்து'. Chinmayi - Rahul தான் அடுத்து விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் பரவுகிறது!

by Santhiya Lakshmi

தமிழ் செய்தி உலகில் இந்த வார ஹாட் டாபிக் ‘விவாகரத்து’. ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தாங்கள் பிரிவதாகவும், விவாகரத்து பெற இருப்பதாகவும் செய்தி வெளியிட இணைய உலகில் பற்றிக்கொண்டது ‘விவாகரத்து’ டாபிக். நடுவில் பாடகி சுசித்ராவும் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து பற்றியும், தனக்கும் நடிகரும், ஸ்டாண்ட்அப் காமெடியனுமான கார்த்திக்கும் இடையேயான விவாகரத்து பற்றியும் பேச செலிபிரிட்டி விவாகரத்துகள் பேசுப்பொருளானது.

Chinmayi

இந்நிலையில் அடுத்து இவர்கள்தான் விவாகரத்து செய்யப்போவதாக பலரையும் லிஸ்ட் போட்டு செய்தி வெளியிட்டு வருகின்றன சில இணையதளங்களும், அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட சோஷியல் மீடியா ஹேண்டில்களும். அதில் அதிகம்பேர் கைகாட்டுவது பாடகி சின்மயியையும், அவரது கணவரும் திரைக்கதை எழுத்தாளருமான ராகுல் ரவீந்திரனையும்தான்.

‘’இருவருமே பிரிந்துவாழ்கிறார்கள், இருவரின் பிரிவுக்கும் சின்மயின் அம்மாதான் காரணம்’’ என்றெல்லாம் கிசுகிசுக்கள் வெளியாகின்றன. இதுகுறித்து சின்மயிக்கும், ராகுலுக்கும் நெருக்கமான நண்பர்களிடம் விசாரித்தோம். 

‘’சின்மயி – ராகுல் பற்றி வெளியாகும் எந்த செய்தியிலும் உண்மையில்லை. இருவருமே வொர்க்கிங் ப்ரொஃப்ஷனல்ஸ். சின்மயி Blue Elephant என்கிற பெயரில் டிரான்ஸ்லேஷன் நிறுவனம் நடத்திவருகிறார். ராகுலும் பல படங்களுக்கும், ஓடிடி தளங்களுக்கும் ஸ்கிரிப்ட் டாக்டரிங் செய்துவருகிறார். வேலை நிமித்தமாக இவர்கள் இருவரும் வேறு வேறு இடங்களுக்குப்போகவேண்டியிருக்கும். இதைத்தான் பிரிந்து வாழ்கிறார்கள் என கிளப்பிவிடுகிறார்கள். இருவரும் சேர்ந்து ஒன்றாகத்தான் வாழ்ந்துவருகிறார்கள். இருவருக்குள்ளும் எந்த கருத்துவேறுபாடும் இல்லை’’ என்கிறார்கள்.

ஆகவே மக்களே, வீண் வதந்திகளை நம்பவேண்டாம்!

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.