இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப படத்தில் இசையமைத்து கலக்கி வரும் இசையமைப்பாளர்களில் ஒருவர் Anirudh. இவருடன் சிவகார்த்திகேயன் சேரும்போது இருவரும் மாஸ் காட்டி வருகின்றனர். இவர்களது கூட்டணியில் வெளிவரும் பெரும்பாலான படங்கள் Hit அடித்து வருகிறது.

அந்த வகையில் ஒரு சில படங்களில் இவர்களது கூட்டணியில் வந்த பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
எதிர்நீச்சல்:

2013-ல் தனுஷ் தயாரிப்பில் Sivakarthikeyan, பிரியா ஆனந்த், சதிஷ் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் ஆகியோர் கூட்டணியில் வெளியாகி ஹிட் அடித்த படம் எதிர்நீச்சல். Sivakarthikeyan ஹீரோவாக தமிழ் சினிமாவில் தன்னை நிரூபிக்க உதவிய படங்களில் இதுவும் ஒன்று. மாரத்தான் போட்டியை மையமாக வைத்து காமெடி கலந்து எடுக்கப்பட்டது. இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சிவா கூட்டணியில் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. தனுஷ், சிவா, அனிருத் கூட்டணியில் “லோக்கல் பாய்ஸ்” பாடல் மற்றும் ஹனி சிங்கர், ஹிப் ஹாப் ஆதி, அனிரூத் கூட்டணியில் “நாளை என்றும் நம் கையில் இல்லை” ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நாளை என்றும் நம் கையில் இல்லை பல இளைஞர்களுக்கு மோட்டிவேஷன் பாடலாக இன்றும் இருந்து வருகிறது.
மான் கராத்தே:

2014-ல் க்ரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் பாக்ஸிங் விளையாட்டை மைய்யப்படுத்தி எடுத்த படம் மான் கராத்தே. இதில் Sivakarthikeyan, ஹன்சிகா மோத்வானி, சதிஷ், யோகி பாபு, அருண்ராஜ் காமராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். வெற்றிக்கூட்டணியான சிவா-அனிரூத் ஜோடி இந்த படத்திலும் தொடர்ந்தது. “டார்லிங்கு டம்பக்கு”, “ராயபுரம் பீட்டரு”, “ஓபன் தி டாஸ்மாக் ” என பாடல்கள் அனைத்தும் சிறுசு முதல் பெருசு வரை அனைவரையும் குத்தாட்டம் போடா வைத்தது.
ரெமோ:

2016-ல் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் Sivakarthikeyan, கீர்த்தி சுரேஷ், சதிஷ், கே.எஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிப்பில் ரொமான்டிக் காமெடி படமாக வெளிவந்தது ரெமோ. இது சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் நடித்த முதல் படம். சிவா-அனிரூத் கூட்டணி இந்த படத்திலும் கலக்கியிருந்தனர். கீர்த்தி சுரேஷ்க்கு ப்ரொபோஸ் செய்யும் காட்சியில் அனிரூத் மியூசிக் மாஸ்டர் பீஸாக இருந்தது.
வேலைக்காரன்:

2017-ல் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், சினேகா, பிரகாஷ் ராஜ், சதிஷ், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் வேலைக்காரன். விறுவிறுப்பாகவே நகர்ந்து செல்லும் படத்தில் பகத், சிவா பேசிக்கொள்ளும் போது அனிரூத் பின்னணி இசையில் கலக்கியிருப்பார். கிளைமேக்ஸ் காட்சியில் அனிரூத் மியூசிக் ரசிக்கும்படியாக அமைந்தது.
டாக்டர்:

2021-ல் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், வினய் நடித்து வெளிவந்த படம் டாக்டர். அமைதியான ராணுவ வீரராக நடித்திருப்பார் சிவா. 100 கோடி வசூல் செய்து சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது. அனிரூத், ஜோனிதா காந்தி, சிவகார்த்திகேயன் கூட்டணியில் “செல்லமா செல்லமா” பாடல் சூப்பர் ஹிட் ஆனது. “நெஞ்சமே நெஞ்சமே” , அவள் முகம் பார்த்து நான் இன்று தடுமாறினேன்” என தொடங்கும் சோ பேபி பாடல்கள் ரசிக்கும் படியாக இருந்தது. கிளைமேக்ஸ் காட்சியில் மியூசிக் அனைவரையும் மிரட்டும் வகையில் இருந்தது.
டான்:

2022-ல் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கதில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே. சூர்யா, சூரி, சிவாங்கி ஆகியோர் நடிப்பில் வெளிவந்தது. கல்லூரியில் படிக்கும் சிவா எதிர்காலத்தில் என்ன ஆகலாம் என குழப்பத்தில்இருப்பார். இறுதியில் டைரக்டர் ஆகலாம் என முடிவுக்கு வருவார். லவ், காமெடி, செண்டிமெண்ட் என இசையில் அனிரூத் மாஸ் காட்டியிருப்பார். “ஜலபுலஜங்கு” ஓப்பனிங் பாடல் குத்தாட்டம் போடா வைத்தது. “பிரைவேட் பார்ட்டி” பாடல் குழந்தைகள் முதல் அனைவரையும் கவர்ந்தது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]