Home Cinema News “வெள்ளி விழா நாயகன்” Sivaji Ganesan-ன் வெள்ளி விழா படங்கள்

“வெள்ளி விழா நாயகன்” Sivaji Ganesan-ன் வெள்ளி விழா படங்கள்

இதுவரை யாரும் செய்யாத சாதனையாக தமிழ் சினிமாவில் 25 படங்களுக்கு மேல் வெள்ளி விழா கண்ட ஒரே நாயகன் Sivaji Ganesan மட்டுமே. 

by Sudhakaran Eswaran

இதுவரை யாரும் செய்யாத சாதனையாக தமிழ் சினிமாவில் 25 படங்களுக்கு மேல் வெள்ளி விழா கண்ட ஒரே நாயகன் Sivaji Ganesan மட்டுமே. 

நாடி, நரம்பு, இரத்தம், சதை என அனைத்திலும் நடிப்பு ஊறிப்போன ஒருவர் என்றால் அது Sivaji Ganesan மட்டுமே.  நடிப்பை மூச்சாக கொண்டு தான் நடிக்கும் கேரக்டருக்கு உயிர் தந்திருப்பார். 

Veteran Actor Sivaji Ganesan

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்‘, ‘வா.வு.சிதம்பரம்’, ‘தெனாலி ராமன்’, ‘கர்ணன்‘, ‘ராஜா ராஜா சோழன்’, ‘ஹரிச்சந்திரா மகாராஜா’ என வரலாற்றில் பெயர்போன கேரக்டர்களை தனது நடிப்பின் மூலம் கண்முன்னே கொண்டு வந்து காட்டியிருப்பார்.  

“ஆதியும் நீயே அந்தமும் நீயே” என்பதை போல சிவாஜி கணேசன் அவர்கள் ஏற்று நடிக்காத கேரக்டரே இல்லை என்று கூறலாம். ஒரு கேரக்ட்டரில் நடிக்கும் போது அந்த கேரக்டராகவே தன்னை நினைத்து 200% உழைப்பை தருவார். 

Sivaji Ganesan

அப்படி 280-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த Sivaji Ganesan அவர்கள் 25-க்கு மேற்பட்ட வெள்ளி விழா படங்களை தந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் இத்தனை வெள்ளி விழா படங்கள் தந்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் மட்டும் தான். 

Sivaji in Parasakthi

1952-ல் சிவாஜியின் முதல் படமான “பராசக்தி” படத்தில் கலைஞர் எழுதிய வசனத்தில்  கோர்ட் காட்சியில் சிவாஜி பேசிய கம்பீர வசனம் போல இன்றுவரை தமிழ் சினிமாவில் அப்படி ஒரு வசன உச்சரிப்பை காண முடியாது. 

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜியின் கம்பிர நடை, பேச்சு என வீரபாண்டிய கட்டபொம்மனை நேரில் பார்த்தால் இப்படி தான் இருந்திருப்பார் என நம்பும்படியாக நடித்திருப்பார். பாசமலர் படத்தில் அண்ணனின் பாசத்தை மிஞ்ச எவருமில்லை என்பதை போல தங்கையை உள்ளங்கையில் வைத்து தங்கியிருப்பார். 

Sivaji Ganesan in Parasakthi

‘ஸ்ரீ வள்ளி’ படத்தில் முருகனாகவும், ‘நவராத்திரி’ படத்தில் 9 கேட்ரக்டரிலும், ‘தங்கப்பதக்கம்’ படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரி  SP. சௌத்ரியாகவும் நடித்திருப்பார். அந்தந்த கேரக்டர்களை நினைத்தால் நம் கண் முன் வருவது Sivaji  என்ற நடிப்பின் இலக்கணம் தான்.  

சிவாஜி கணேசன் நடிப்பில் வெள்ளிவிழா கண்ட படங்கள்:    

வருடம்      படங்கள்            கேரக்டர்கள்          இயக்குனர்கள்நாட்கள்
1952 பராசக்தி (தமிழ்)குணசேகரன்  கிருஷ்ணன்- பஞ்சு 

296 நாட்கள்
1959 வீரபாண்டிய கட்டபொம்மன்வீரபாண்டிய கட்டபொம்மன்  BR. பந்தலு181 நாட்கள்
1959  பாகப்பிரிவினை          கண்ணையன் A. பீம்சிங் 216 நாட்கள்
1960இரும்புத்திரை மாணிக்கவாசகம்   SS. வாசன் 181 நாட்கள்
1960குறவஞ்சி   கதிரவன்    A. காசிலிங்கம்     175 நாட்கள்
1961பாவ மன்னிப்பு   ராமு/ ரஹீம்  A. பீம்சிங்177 நாட்கள்
1961பாச மலர்    ராஜசேகரன் (ராஜு)  A. பீம்சிங்176 நாட்கள்
1965திருவிளையாடல் சிவன் (கடவுள்)   AP. நாகராஜன் 179 நாட்கள்
1972பட்டிக்காடா பட்டணமா    மூக்கையா/ முகேஷ்  P. மாதவன்182 நாட்கள்
1972வசந்த மாளிகைஆனந்த்  KS. பிரகாஷ்   287 நாட்கள்
1974தங்கப்பதக்கம்   SP. சௌத்ரிP. மாதவன்181 நாட்கள்
1976உத்தமன்கோபி  கோபாலகிருஷ்ணன்VB. ராஜேந்த்ரா பிரசாந்த்    203 நாட்கள்
1978தியாகம்        ராஜா   ராஜசேகரன்  K. விஜயன்         175 நாட்கள்
1978பைலட் பிரேம்நாத்பிரேம்நாத்AC. திருலோக் சந்தர்  220 நாட்கள்
1979திரிசூலம்ராஜசேகர்  சங்கர் குருமூர்த்தி   K. விஜயன்  200 நாட்கள்
1982தீர்ப்புராஜசேகர் R. கிருஷ்ணா மூர்த்தி177 நாட்கள்
1983நீதிபதி ராஜசேகர்R. கிருஷ்ணா மூர்த்தி177 நாட்கள்
1983சந்திப்புராமநாதன் /  ராஜாCV. ராஜேந்திரன் 175 நாட்கள்
1985முதல் மரியாதை மலைச்சாமி   பாரதிராஜா 177 நாட்கள்
1985படிக்காதவன்ராஜசேகர்ராஜசேகர்   175 நாட்கள்
1992தேவர் மகன்      பெரிய தேவர் பரதன்180 நாட்கள்
1999படையப்பா  தர்மலிங்கம் KS. ரவிக்குமார்212 நாட்கள்

தமிழ் சினிமாவில் அதிக வெள்ளிவிழா கண்ட நடிகர் என எந்தவித சந்தேகமும் இன்றி சிவாஜி கணேசன் அவர்களை கூறலாம். அதற்க்கு அடுத்தபடியாக இருக்கும் கமல், ரஜினி, எம்.ஜி.ஆர் ஆகியோர் இவருக்கு பக்கத்தில் கூட இல்லை.             

இன்னும் எத்தனையோ படங்கள் சில நாட்கள் குறைவாக ஓடியதால் வெள்ளிவிழா படங்களின் பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனால் ஒரே சமயம் இரண்டு, மூன்று படங்கள் ரிலீஸ் ஆகி வெள்ளிவிழா காணும் சமயம் சிவாஜி அவர்களின் வேறு புதிய படங்களின் வருகையால் எதாவது 1,2 படங்களை திரையரங்கில் இருந்து எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படி வெள்ளிவிழாவை தவறவிட்ட படங்களின் எண்ணிக்கை ஏராளம். அதற்க்கு பட்டியல் போட்டால் நீண்டு கொண்டே போகும். 

தமிழ் சினிமாவில் இன்றைய கால நடிகர்களின் படங்கள் 100 நாட்கள் ஓடுவது என்பதே பெரிய கனவாக இருந்து வருகிறது. அப்படி இருக்கையில் வருடத்திற்கு 2,3 படங்கள் 100 நாட்கள், 150 நாட்கள், 175 நாட்கள், 200 நாட்கள் என மாதக்கணக்கில் திரையரங்கில் திரையிடப்பட்டது. ஒரு சில ஆண்டுகள் சிவாஜியின் ராசியான ஆண்டாக இருக்கும். அந்த ஆண்டில் வெளியாகும் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகும். அப்படி ஒரே வருடத்தில் 4,5 வெற்றிப்படங்கள் தந்தும் உள்ளார். 

தமிழ் சினிமா உலகில் இதுவரையும் சரி, இனிமேலும் சரி Sivaji  அவர்களின் படைப்புகளுக்கு கிடைத்த பெருமையும், ஆதரவும் இனி எந்த நடிகராலும் பெற முடியாது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.