தமிழ் திரையுலகில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அடுத்த படத்தின் அப்டேட்டை சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டது படக்குழு! தற்போது சிவகார்த்திகேயன் நடித்து அதிகளவு மக்கள் வரவேற்பை பெற்று அனைவருக்கும் பிடித்த வெற்றி படமாக அமைந்துள்ளது அமரன் திரைப்படம். அதை தொடர்ந்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‘மாதராஸி’ என்ற புதிய அதிரடி ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் காமெடி நிறைந்த கலாட்டா படங்களில் நடித்து கொண்டிருந்து தனது நகைச்சுவை திறனை வெளிக்காட்டிய சிவகார்த்திகேயன் தற்போது தொடர்ந்து அதிர வைக்கும் அதிரடி மற்றும் ஆக்ஷன் படங்களில் நடித்து கலக்கி கொண்டிருக்கிறார்.
‘மதராஸி’ படத்திற்கான முதல் பார்வையை இணையதளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படம் ஒரு அதிரடி நிறைந்த ஆக்ஷன் படமாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
#SKxARM is #Madharasi in Tamil, Telugu, Kannada & Malayalam & #DilMadharasi in Hindi ❤️🔥
— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) February 17, 2025
Get ready for Massive Carnage in cinemas 💥💥
SK & ARM are all set to give you THE BIGGEST ACTION FILM 🔥
TITLE GLIMPSE & FIRST LOOK out now!
▶️ https://t.co/ORNLrxLhZG
Happy Birthday,… pic.twitter.com/a7jA0TEmNM
இப்படத்தில் ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வால் போன்ற பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், வித்யுத் ஜாம்வால் ஏற்கெனவே ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘துப்பாக்கி’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்களுக்கு இப்படம் ஆக்ஷன் நிறைந்த வெற்றி படமாக அமையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.’மதராஸி’ படம் ஆக்ஷன் அதிரடி படங்களை விரும்பி பார்ப்பவர்களுக்கு ஒரு சிறந்த படமாக அமையும் என்று எதிர்பார்க்க படுகிறது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர் பார்க்க படுகிறது.
மதராஸி படக்குழு
நடிகர்கள் | சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வால், பிஜு மேனன், ஷபீர் கல்லாரக்கல், விக்ராந்த். |
இயக்கம் | ஏ.ஆர் முருகதாஸ் |
இசையமைப்பு | அனிருத் ரவிச்சந்தர் |
தயாரிப்பாளர் | என்.வி. பிரசாத் |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]