கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் கைவசம் ‘அமரன்‘, ‘அயலான் 2‘, ‘SK 23‘ ஆகிய படங்கள் உள்ளது. இதில் ‘SK 23’ படத்தை டாப் இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிக் கொண்டிருக்கிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடந்து கொண்டிருக்கிறது.
![சிவகார்த்திகேயனின் ஆக்ஷன் படமான 'அமரன்' எப்போது ரிலீஸ் தெரியுமா? 2 Amaran upcoming film](https://kollywoodglam.com/wp-content/uploads/2024/04/Amaran_upcoming_film.jpg)
‘அமரன்’ படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் ஹீரோயினாக சாய் பல்லவி டூயட் பாடி ஆடி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
தற்போது, இப்படத்தை இந்த ஆண்டு (2024) செப்டம்பர் 27-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இதன் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறதாம். இதன் டீசர் வெளியான நாளில் இருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆடியன்ஸுக்கு மிக அதிகமாக உள்ளது.
‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ மற்றும் ‘சோனி பிக்சர்ஸ்’ இணைந்து தயாரித்துக் கொண்டிருக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார், CH.சாய் ஒளிப்பதிவு செய்கிறார், ஆர்.கலைவண்ணன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.