இந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அவ்வளவு பிரம்மாண்ட தொடக்கமாக அமையவில்லை என்பது 2024ன் முதல் பாதியில் வெளியான படங்களை வைத்தே யூகிக்க முடியும். அதற்கு அப்படியே முரணாக, இரண்டாம் பாதியில் முன்னணி நடிகர்களின் படங்கள் போட்டிபோட்டு கொண்டு வெளியாக தயாராக உள்ளது.

மே மற்றும் ஜூன் மாட்டாஹத்தில் ‘அரண்மனை 4’ மற்றும் ‘மகாராஜா’ படங்களின் வெற்றியால் தமிழ் சினிமாவின் கணக்கு தொடங்கப்பட்டது. அதை தொடர்ந்து கமல் ஹாஸனின் ‘இந்தியன் 2’ படம் வெளியானது. இதே ஜூலை மாதம் 26 அன்று தனுஷ் நடித்த ‘ராயன்’ படம் வெளியானது. பெருத்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் வசூல் வேட்டை செய்து ப்ளாக்பஸ்டர் படமாக ஆனது.
ஆகஸ்ட் முதல் வாரம் OTT Platform-ல் வெளியாகும் தமிழ் படங்கள் லிஸ்ட்
இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டபோது, வேறு எந்த படங்களும் வெளியாகவில்லை. பார்த்திபன் இயக்கத்தில் ‘Teenz’ படம் ஜூலை 12 வெளியானது. இந்த தேதியில் தனது படத்தை வெளியிட பெரிய போராட்டமாக இருந்ததை இயக்குனர் பார்த்திபன் ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதம் முதல் நடிகர்கள் விக்ரம், சூரியா, ரஜினிகாந்த் ஆகிய பெரிய ஹீரோக்களின் படங்களும் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது, இந்த கடும் போட்டிக்கு இடையில் சிறு பட்ஜெட் படங்களின் நிலைமை தான் சவாலாக அமைந்துள்ளது. 2ம் தேதி ஒரே நாளில், 6 சிறு பட்ஜெட் படங்கள் வெளியானது.

அடுத்த பெரிய ஹீரோ படம் வெளியாவதுக்குள் தங்களின் படத்தை வெளியிட்டு குறைந்தபட்சம் 2 வாரங்களாவது திரையரங்குகளில் ஓட்டிவிடலாம் என்ற கணக்கில் இந்த சிறு பட்ஜெட் படங்கள் வெளியானது. வரும் 15ம் தேதி நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குனர் பா. ரஞ்சித்தின் ‘தங்கலான்‘ படம் வெளியாகிறது. பிரமாண்டமான ப்ரோமோஷன் மற்றும் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படத்துடன் போட்டியிட வேண்டாம் என்றும், ஆகஸ்ட் 15 சுதந்திர தின விடுமுறை என்பதாலும் இந்த தேதியில் வெளியிட முதலில் பலத்த போட்டி இருந்தது.
டாப் ஸ்டார் பிரஷாந்த் வெகு நாளுக்கு பின் நடிக்கும் ‘அந்தகன்’ படம் கூட ‘தங்கலான்’ படத்துடன் இணைந்து வெளியாவதாக இருந்தது. கடைசியில் ‘அந்தகன்’ படத்தின் வெளியீட்டு தேதியை முன்தள்ளி ஆகஸ்ட் 9ம் தேதியாக மாற்றியுள்ளனர். கண்டிப்பாக ரசிகர்கள் பெரிய பொருட்செலவில் உருவான படத்தை திரையரங்குகளில் பார்க்க விரும்புவதை கணித்து இந்த முடிவு எடுக்க பட்டுள்ளது.

இதே போல பெரிய இடைவேளைக்கு பின் இயக்குனர் ஹாலிதா ஷமீம் இயக்கத்தில் ‘மின்மினி’ படம் வெளியாகும் செய்தி வெளியானது. ஆகஸ்ட் 9 தான் ‘மின்மினி’ படம் வெளியாகிறது. ஒரு பெரிய கதாநாயகன், ஆடம்பரமாக செலவழித்து எடுக்கப்படும் படத்துடன் ஒப்பிட்டால், திரையரங்கு உரிமையாளர்கள் கூட சிறு பட்ஜெட் படங்களை எடுக்காமல் இருக்கிறார்கள்.
சமீபத்தில் நடந்த ‘தங்கலான்’ இசை செளியீட்டு விழாவில் கூட படத்தின் கதாநாயகி பார்வதி திருவொத்து மேடையில் பேசினார். ஆகஸ்ட் 15 இந்த படம் வெளியாவது படத்தின் கதையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு முக்கியமான காரணியாக இருக்கும் என்றார். விடுமுறை நாள் என்பதை தாண்டி இப்படியான காரணங்களுக்காகவும் ரிலீஸ் தேதிக்கான போட்டி தீவிரமாக இருக்கிறது.
#Boat ரிலீஸ் ஆனதை விட இப்போது திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மக்களின் அன்பான பாராட்டிற்கும்,பெரும் ஆதரவிற்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்!
— Chimbu Deven (@chimbu_deven) August 6, 2024
🙏🙏🙏@iyogibabu @maaliandmaanvi @cde_off @Madumkeshprem @SakthiFilmFctry @sakthivelan_b @Gourayy @saregamasouth @onlynikil pic.twitter.com/iH4zKi7LFG
இருப்பினும் ‘Boat’ மற்றும் ‘Teenz’ ஆகிய படங்கள் எளிதாக மக்களை கவர்ந்ததால், வெளியான பிறகு பல திரையரங்குகளில் திரையிடப்பட்டது. 5, 6 சிறு பட்ஜெட் படங்கள் மொத்தமாக வெளியானாலும் அதில் எது அதிகம் ரசிக்கும் படியாக இருக்கிறதோ, எந்த படத்தில் ஓரளவுக்கு மக்களுக்கு பரிட்சயமான நடிகர்கள் இருக்கிறார்களோ, அந்த படத்துக்கான வரவேற்பும் தியேட்டரில் ஓடும் காலமும் அதிகரிக்கிறது.
இப்படியான சிக்கலில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 15 வரை தங்களின் படங்களை வெளியிட்டு வருகிறார்கள் இந்த இயக்குனர்கள். ஒரு மாஸ் ஹீரோவின் அச்டின் படத்துக்கு கிடைக்கும் பாராட்டுகளும், வெளியாவதற்கு முன்பே இப்படியான படங்களுகான எதிர்பார்ப்பும் ‘Art Films’ என்று சொல்லப்படும் பிற படங்களுக்கு கிடைக்காதது இப்போதைய சிக்கலாக இருக்கிறது. இந்த நிலை மாறுவதற்கு தான் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து, முன்னணி நடிகர்களுக்கு சில பல விதிமுறைகளை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]