2013-ஆம் ஆண்டின் path breaking திரைப்படம் என்று மக்களால் கொண்டாடப்பட்ட “சூது கவ்வும்” படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருட இறுதியில் வெளியாக உள்ளது. இது குறித்த அறிவிப்பை “Soodhu Kavvum 2” தயாரிப்பாளர் CV குமார் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
சூது கவ்வும்
இயக்குனர் நலன் குமாரசாமியின் அறிமுக படமான “சூது கவ்வும்”, தமிழ் சினிமாவில் அவருக்குக்கான தனி இடத்தையும், ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கியது என்றே கூறலாம். அதில் நடித்த நடிகர்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், அசோக் செல்வன் மற்றும் கருணாகரன் என அனைவரும் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களாக உருமாறியுள்ளனர். Black comedy, வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்கள், சுவாரஸ்யமான கதைக்களம், காட்சிகளை மேலும் மெருகேற்றும் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை என இவை அனைத்தும் இன்றளவும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இரண்டு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 35 கோடி வசூல் செய்து blockbuster ஹிட் படமாக மாறியது.
Witness the madness of the gang in theatres on 13th December. #SoodhuKavvum2 Releasing on 13th December 🚁
— Thirukumaran Entertainment (@ThirukumaranEnt) November 20, 2024
Soodhu Kavvum 2: நாடும் நாட்டு மக்களும் #SoodhuKavvum2FromDec13@ThirukumaranEnt @icvkumar @thangamcinemas @cinemas56492 @actorshiva #Karunakaran @HarishaJestin pic.twitter.com/KPDubriZCI
இந்த திரைப்படத்தின் cult dialogues பல meme template-களை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது.
“இதுக்கு ஒரு குருட்டு தனமான முட்டாள் தனமும், முரட்டு தனமான புத்திசாலி தனமும் தேவை”
“துப்பாக்கி வச்சிருக்கேன் சிரிக்கிற”
“நயன்தாராவுக்கு கோவில் கட்டுனவனுக்கெல்லாம் என் thinking ரொம்ப பிடிக்கும்”
“சில்லறை இல்ல பா”
Soodhu Kavvum 2 : நாடும் நாட்டு மக்களும்

11 ஆண்டுகளுக்கு பிறகு “சூது கவ்வும்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் SJ அர்ஜுன் இயக்கியுள்ளார். இதில் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் mirchi சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். சிவா நடிப்பில் இதற்கு முன் மூன்று part 2 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது “சென்னை 28-II, தமிழ் படம் 2, கலகலப்பு 2”. அவை அனைத்தும் பரவலாக நல்ல வரவேற்பையும் பெற்றது. இது அவர் நடிக்கும் நான்காவது இரண்டாம் PART 2 திரைப்படமாகும். இந்த படத்தின் வெளியீட்டு தேதி குறித்த teaser-ஐ தயாரிப்பாளர் CV குமார் வெளியிட்டார். நடிகர் சிவாவின் signature ஆன காமெடி genre-ல் கடத்தல் பின்னணியில் இந்த காணொளி அமைந்துள்ளது. இந்த teaser-ல் Bigg Boss Tamil season 8 wildcard போட்டியாளரான வர்ஷினி இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலாம் பாகம் மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து இந்த படத்தின் மீதான ஆர்வம் சற்று அதிகமாகவே உள்ளது.
படம் | சூது கவ்வும் 2 : நாடும் நாட்டு மக்களும் |
வெளியாகும் நாள் | டிசம்பர் 13, 2024. |
நடிகர்கள் | சிவா, கருணாகரன், super good சுப்பிரமணி |
இயக்குனர் | SJ அர்ஜுன் |
தயாரிப்பு நிறுவனம் | Thirukumaran Entertainments |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]