Soori, Sasikumar-ன் கிராமத்து படமாக வெளியாகும் ‘Garudan’. வெற்றிமாரன் கதை எழுதும் கிராமிய களத்தில் சமுத்திரகனி, மைம் கோபி, ஷிவதா நாயர் நடிக்கும் ஆக்ஷன் திரைப்படம். மே கடைசியில் ரிலீஸ் ஆக உள்ளது.
Garudan படத்தின் வழியாக ஹீரோவாக தொடரும் நடிகர் Soori, இயக்குனர் வெற்றிமாறன் எழுதும் கதையில் மறுபடியும் நடிக்கிறார். நகைச்சுவை நடிகராக பலரையும் சிரிக்க வைத்த நடிகர் சூரி தனது இரண்டாவது இன்னிங்ஸில் சீரியஸான ஹீரோவாக நடித்து வருகிறார். அதற்காக தனக்கு பொருந்தும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார். நடிகர்கள் Sasikumar, Unni Mukundan, Samuthirakani ஆகியோர் நடித்துள்ளனர். உடன் ரேவதி ஷர்மா, பிரிகிதா, ரோஷினி ஹரிப்ரியன், ஷிவதா நாயர் நடித்துள்ளனர். இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனராக இருந்த துரை செந்தில்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். ‘Viduthalai’ படத்தின் ஆரவார வெற்றியால் இந்த படத்திற்கும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Garudan படத்தை போலவே பல கிராமத்து கதைகளில் நடிகர் Soori-யையும் நடிகர் Sasikumar -யையும் பல முறை பார்த்திருப்போம். இருவருமே தொடர்ந்து கிராமம் சம்பந்தப்பட்ட கதைக்களத்தில் வெற்றியாளர்களே. Garudan-ம் இதே கதைகளம் தான், ஆக்ஷன் என்டர்டெயின்மென்ட் படமாக வந்துள்ளதாகவும், ரசிகர்களை தயாராக இருக்கவும் நடிகர் Soori தனது ‘X’ தளத்தில் பதிவிட்டார்.
படத்தின் போஸ்டருக்கும், படத்தின் முதல் பாடல் ‘பஞ்சவர்ண கிளியே’ வெளிவந்து பிரபலமானது. பாடலுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வரும் படத்தில் ஆர்த்தர் கே வில்சன் ஒலிப்பதிவு செய்துள்ளார். லார்க ஃபிலிம்ஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை ஆனால் May 2024 கண்டிப்பாக வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு. May 31 படத்தை வளியிட அதிக வாய்ப்பு உள்ளது என பேசப்படுகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]