கடந்த வாரத்தில் சூர்யா RJ. பாலாஜி கூட்டணியில் சூர்யா நடிக்கும் 45 -வது படத்தின் அறிவிப்பு வெளியாகி வைரலானது. காமெடி நடிகராக இருந்த பாலாஜி, படத்தில் நடிக்கும்போது ஒரு சில நடிகர்களின் பெயரை சொல்லி கிண்டல் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
நானும் ரவுடி தான் படத்தில் சூர்யாவின் அஞ்சான் படத்தை கூறி கிண்டல் செய்திருந்தார். தற்போது அதே சூர்யாவை வைத்து இயக்குனராக படம் எடுக்க திட்டமிட்டுள்ளார். படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கியுள்ள நிலையில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.
காமெடி நடிகராக திரையில் தோன்றி ஹீரோ, இயக்குனர் என சினிமாவில் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை கொண்டு தன்னை தானே அப்டேட் செய்து வருகிறார் RJ. பாலாஜி.
நடிகராக தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பாலாஜி நடிப்பில் அடுத்து வரவிற்கும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் தலைப்பு “சொர்க்கவாசல்” எனவும், அதில் மத்திய சிறைச்சாலை மெட்ராஸ் என் எழுதப்பட்டு, #002573 1999 என்ற எண் இருக்கும்படியான போர்டை கையில் வைத்துள்ளார்.
கவின் நடிக்கும் ‘Bloody Beggar’ கதை என்ன? வெளியானது டிரைலர்!
சிறைக்கைதியாக இருப்பது போன்ற கெட்டப்பில் இந்த படத்தின் First Look ரசிகர்களை கவர்ந்துள்ளது. சித்தார்த் விஸ்வநாத் இயக்கி, கிறிஸ்டோ சேவியர் இசையமைக்கவுள்ளார். சூர்யா 45 படத்தின் அப்டேட் வரும் என நினைத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த படத்தின் அப்டேட் எதிர்பாராத ஒன்றே.
இந்த படத்தின் First Look போஸ்டரை இயக்குனர் பா. ரஞ்சித் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். படத்தின் இயக்குனரான சித்தார்த் விஸ்வநாத் ரஞ்சித்தின் உதவி இயக்குனராக பணியாற்றியவர். RJ. பாலாஜிக்கு கீழ் படிக்கட்டுகளில் 10 பேர் நின்று கொண்டிருக்கும் படியும் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது.
சிறையை மையப்படுத்திய கதை களமாக இருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் நடிகர்கள் அப்டேட் வரும் நாட்களில் தெரிய வாய்ப்புள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]