மலையாள சினிமாவின் cult blockbuster ஆன “மஞ்சும்மேல் பாய்ஸ்” மூலமாக இந்திய சினிமா முழுவதும் “kuttettan” ஆக அறியப்படும் சௌபின் ஷஹிர் தற்போது தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகிறார்.

Assisstant director ஆக 2003-ஆம் ஆண்டில் தனது திரை பயணத்தை மலையாள சினிமாவில் தொடங்கினார். 2013-ஆம் ஆண்டு பஹத்பாசில், ஆண்ட்ரியா நடித்த “அன்னயும் ரசூலும்” என்ற திரைப்படம் மூலியமாக நடிகனாக அறிமுகமானார். தமிழ் ரசிகர்களுக்கு “ப்ரேமம்” படத்தின் மூலம் பரிச்சயமான இவர், ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் ver 5.25, அம்பிலி, இருள், கும்பலங்கி நயிட்ஸ், சூடானி from நைஜீரியா’ போன்ற படங்களில் இவரின் ராட்சஸ நடிப்பை கண்டு ரசிகர்களின் எண்ணிக்கை கேரளாவையும் தாண்டி தென்னிந்தியா முழுவதும் பரவியது.
Kicked to have #SoubinShahir sir joining the cast of #Coolie as #Dayal 💥
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 28, 2024
Welcome on board sir 🔥🔥@rajinikanth sir @anirudhofficial @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @sunpictures pic.twitter.com/Cl9eFOpJMO
2024-ஆம் ஆண்டு வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற “மஞ்சும்மேல் பாய்ஸ்”-ல் KUTTETTAN ஆக வாழ்ந்து தற்போது ரசிகர்கள் மனத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் “coolie” படத்தின் புது அப்டேட் இன்று வெளியாகியது. இதில் சௌபின் ஷஹிர் “தயாள்” என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
“பாதிராத்திரி, ஜூத்தன், ப்ரவின்கூடு ஷப்பு” ஆகிய திரைப்படங்கள் சௌபின் நடித்து வரும் ஆண்டுகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]