கோடை விடுமுறைக்கு ‘Star’, ‘Rasavathi’ காண போறீங்களா?!
Star- Kavin

Kavin நடிப்பில் பெரிய ஹைப் உடன் நாளை ரிலீஸ் ஆகிறது ‘Star’. இளம் இயக்குனர் இலன் இயக்கத்தில் ‘Dada’ நடிகர் Kavin, மலையாள நடிகர் லால், புதுமுகம் அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. Kavin-ன் உணர்ச்சிகரமான நடிப்பும் படத்திற்காக படக்குழு எடுத்த முயற்சிகள் டிரெய்லரில் தெரிகிறது. சினிமாவில் சாதிக்க நினைக்கும் இளைஞனின் பயணம், பெரும்பாலான சினிமா ரசிகர்களை கண்டிப்பாக ஈர்க்கும். ‘Star’ படத்தில் சைப்ரஸ் கேமியோவாக ஒரு பிரபலம் நடித்துள்ளதாகவும் Kavin கூறியுள்ளார்.
Rasavathi- Arjun Das

Arjun Das மற்றும் Tanya Ravichandran நடித்து, சாந்தகுமார் இயக்கியிருக்கும் படம் ‘Rasavathi’. கொடைக்கானலில் நடக்கும் கதையில் Arjun Das ஒரு சித்த மருத்துவராக நடித்துள்ளார். அமைதியாக செல்லும் வாழ்க்கையில் கடந்த காலத்தில் இருந்து வரும் பிரச்சனைகளும் அதை எப்படி சமாளிக்கிறார் இந்த சித்தா டாக்டர் என்பது கதை. இந்த படத்தில் Arjun Das -ஐ எளிமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு புதிய கதைக்களத்தில் நல்ல த்ரில்லர் படமாக அமையுமா என்று நாளை தெரியும்.
Uyir Thamizhukku- Ameer

இயக்குனர் Ameer தமிழ் சினிமாவில் தரமான கதைகளை திரைப்படமாக்கி பின்னர் நடிப்பிலும் நல்ல வரவேற்பைப் பெற்றவர். இப்போது உயிர் தமிழுக்கு என்ற படத்தில் நடித்து நாளை வெளியாக உள்ளது. ஆதம் பாவா இயக்கியிருக்கும் இப்படத்தில் Ameer-க்கு ஜோடியாக சாந்தினி தமிழரசன் நடித்துள்ளார். அரசியல்வாதியாக நடித்துள்ளார் இயக்குனர் Ameer, வித்யாசாகர் இசையமைத்துள்ளார். அரசியல் த்ரில்லர் படமாக தெரியும் Uyir Thamizhukku ரசிகர்களால் பாராட்டபடுமா என்ற தீர்ப்பு நாளை வரும்.
Inga Naan dan Kingu- Santhanam

நகைச்சுவை நடிகர் Santhanam ஹீரோவாக நடித்துள்ள படம் Inga Naan dan Kingu. நகைச்சுவையான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து வரும் நடிகர் Santhanam மற்றுமொரு காமெடி என்டர்டெயின்மென்ட் படத்தை தந்துள்ளார். புதுமுகம் ப்ரியாலயா ஹீரோயினாக நடித்துள்ளார், உடன் தம்பி ராமையா, முனிஸ்காந்த், கூல் சுரேஷ், விவேக் பிரசன்னா நடித்துள்ளனர். கல்யாணத்துக்கு பெண் கிடைக்காமல் இருக்கும் வாலிபன் ஹீரோயினை பார்த்தும் காதலில் விழ வேறு பிரச்சினைகளும் ஆரம்பிக்கிறது. இது தான் Inga Naan dan Kingu படத்தின் கதை. நண்பர்களுடன் சிரித்து ரசிக்க ஒரு படம் நாளை வெளியாகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]