தமிழ் சினிமாவில் சிறு வயது முதல் சுட்டித்தனமாக நடித்து வந்த STR Silambarasan உடல் சார்ந்த பிரச்சனையால் சிறுது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். பின்னர் ஈஸ்வரன் படத்தின் மூலம் கம்பேக் செய்து அசத்தினார்.
பின்னர் நடித்த படங்கள் பெரிய அளவில் அவருக்கு கைகொடுக்க தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நபராகவும் மாறினார். உடலை குறைத்து பல இளைஞர்களுக்கு ரோல் மாடலாகவும் இருந்து வருகிறார்.
Extremely happy to associate with our prestigious @Ags_production & My dear fan, the talented and youthful director @Dir_Ashwath for a terrific entertainer ❤🔥
— Silambarasan TR (@SilambarasanTR_) October 21, 2024
Kattam Katti Kalakrom 🔥#VintageSTRmood #AGS27
#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh… pic.twitter.com/c9BSMTll0c
ஆரம்பம் முதலே பன்ச் டைலாக், மாஸ் ஹீரோ, ஸ்டைல் என ரஜினிகாந்த் அவர்களை போலவே நடித்து வந்த சிம்புவை லிட்டில் சூப்பர் ஸ்டார் எனவும் கொண்டாடி வந்தனர்.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் நடித்திருந்த சிம்பு அடுத்து ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்தார். அந்த படத்தின் அப்டேட் சரியாக தரவில்லை.
இந்த நிலையில் சிம்பு நடிக்கும் 49 -வது படத்தை படத்தை அஸ்வந்த் மாரிமுத்து இயக்கவுள்ளதாகவும், AGS நிறுவனம் தயாரிக்கவுள்ளது என அப்டேட் வந்துள்ளது. இதற்க்கு முன்பு GOAT படத்தையும், தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகும் டிராகன் படத்தையும் AGS நிறுவனம் தயாரித்துள்ளது.
சிம்பு நடிக்கும் 49 -வது படம் AGS நிறுவனம் சார்பில் வெளியாகும் 27 -வது படமாகும். சிம்பு முந்தைய படங்களான தம், மன்மதன், வல்லவன், விண்ணை தாண்டி வருவாயா போன்ற படங்களில் விரலை வைத்து ஒரு ஸ்டைல் காட்டியிருப்பார்.
Top 5 Tamil Actors – குழந்தை நட்சத்திரம் முதல் உச்சநட்சத்திரம் வரை ஒரு சிறப்பு பார்வை
அந்த ஸ்டைல் ரசிக்கும்படியாக இருக்கும் . பின்னர் வந்த படங்களில் சிம்புவின் விரல் வித்தை இல்லாமல் போனது. தற்போது வெளியாகவிருக்கும் சிம்பு 49 படத்தில் முந்தைய படங்களை போல விரல் வித்தை காட்டும் படியான போஸ்டர் வெளியிட்டு அப்டேட் வந்தது.
Gen Z Mode என குறிப்பிட்டு 2K கிட்ஸ் பாணியில் படம் அமையவுள்ளதையும் குறிப்பிட்டிருந்தனர். கையில் கயிறு, கர்சீஃப், கழுத்தில் டேட்டோ என விண்டேஜ் கெட்டப்பில் சிம்புவை மீண்டும் பார்க்க ஆவலாக உள்ளது.