மெட்ராஸ் உயர் நீதிமன்றம் Studio Green தயாரிப்பு நிறுவனத்துக்கு விடுத்துள்ள ஆணையில் நவம்பர் 13ம் தேதிக்குள் ரூ. 20 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தவில்லை என்றால் நவம்பர் 14, 2024 வெளியாகவிருக்கும் ‘கங்குவா’ படத்தை வெளியிடக்கூடாது என அறிவித்துள்ளது.
Justice ஜி ஜெயச்சந்திரன் மற்றும் Justice சி வி கார்த்திகேயன் தலைமையிலான அமர்வு, Studio Green நிறுவனத்தின் உரிமையாளர் KE ஞானவேல் ராஜாவிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ. 1 கோடியைச் செலுத்தினால் தான் அவர்கள் தயாரிப்பில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான ‘தங்கலான்’ படத்தை வெளியிட முடியும் என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தன்னிடம் பணப்பற்றாக்குறை இருப்பதாகக் குறி கடைசி நிமிடத்தில் குறிப்பிட்ட பணத்தைச் செலுத்தி ‘தங்கலான்’ படத்தை வெளியிட்டனர்.
கங்குவா, தங்கலான் கண்டிப்பாக Pan India ஹிட் படங்கள்- தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா!
Joyful smiles lighting up the stage and an atmosphere charged with energy at the #Kanguva Meet in Hyderabad.🥳🔥
— Studio Green (@StudioGreen2) October 24, 2024
A @ThisIsDSP Musical 🎶#KanguvaFromNov14 🦅@Suriya_offl @thedeol @directorsiva @DishPatani @StudioGreen2 @gnanavelraja007 @vetrivisuals @supremesundar… pic.twitter.com/oRwDY2nH6K
தற்போது மீண்டும் நவம்பர் 14ம் தேதி வெளியாகவுள்ள ‘கங்குவா’ படத்தை வெளியிடத் தடை விதிக்கப்பட்டிருப்பதும், ரூ. 20 கோடியை நாளை (13 நவம்பர்) செலுத்தினால் மட்டுமே படத்தைத் திரையிட அனுமதிக்கப்படும் என அறிவித்துள்ளது. ‘கங்குவா’ படத்தை அதிக பொருட்செலவில், 5 மொழிகளில் உலகெங்கிலும் 11,000 திரைகளில் வெளியிட முடிவெடுத்துள்ள நிலையில், படம் வெளியாக 48 மணி நேரத்திற்குள் இப்படியான சிக்கல் வந்திருப்பது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
‘கங்குவா’ படத்தில் நடிகர் கார்த்தியா? ரிலீஸ் ட்ரைலரில் வருபவர் யார்?
Studio Green vs அர்ஜூன்லால் சுந்தர்தாஸ்
2011 முதல் 2012 வரை திவாலான தொழிலதிபர் அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் பல கோடி ரூபாய் வரை நிதி முதலீடு மோசடியில் ஈடுபட, அப்போது KE ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்த படத்தில் ரூ. 40 கோடி முதலீடு செய்துள்ளார். ஆனால் முழு பணத்தையும் கொடுப்பதற்குள் அவரின் நிறுவனம் திவாலானதால், ரூ. 12 கோடி மட்டுமே முதலீடு செய்த நிலையில் அவர் பின்வாங்கியுள்ளார். அவரின் நிறுவனம் திவாலானதால் ரூ. 2 கோடியை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வழங்க நீதிமன்றம் ஆணையிட்டது.
இதனைத் தொடர்ந்து மேலும் அவரின் மறைவுக்குப் பிறகு அவருக்குச் சேரவேண்டிய ரூ. 10 கோடியைச் செலுத்த Studio Green நிறுவனத்துக்கு ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் கொடுத்த பணத்தை படவேலைகளுக்கு செலவிட்டதாகவும், மேலும் 3 ஹிந்தி படங்களின் தமிழ் உரிமையை அர்ஜூன்லாலிடம் வழங்கியதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறினார். இருப்பினும் வழக்கைத் தொடர்ந்த அர்ஜூன்லால் தரப்பினர், 2013 முதல் இதுவரை வட்டியுடன் சேர்த்து, ரூ. 20 கோடியை வழங்க வேண்டி மனுத்தாக்கல் செய்தனர். 2019 ஆணையிட்ட படி நிர்ணயிக்கப்பட்ட பணத்தை செலுத்தாததால், இப்போது மேலுமொரு மனுத் தாக்கல் செய்யப்பட்டு, Studio Green சார்பில் வெளியாகும் படங்களைத் தடை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.