மதுரையை மையமாக வைத்து 1980-களில் நடக்கும் பிரச்சனைகளை காதல், செண்டிமெண்ட், எமோஷன், வைலன்ஸ் கொண்டு ரசிக்கும் படியாக அலப்பறை கிளப்பிய சசிகுமார்.
2008-ல் சசிகுமார் இயக்கத்தில், ஜேம்ஸ் வசந்தன் இசையில் ஜெய், ஸ்வாதி, சமுத்திரக்கனி, சசிகுமார், கஞ்சா கருப்பு ஆகியோர் நடிப்பில் வெளியானது சுப்ரமணியபுரம். 1980- களில் மதுரையை மையப்படுத்தி குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.
சுப்ரமணியபுரம் படத்தின் ஷூட்டிங் வெறும் 85 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டது. குறைந்த பட்ஜெட்டில் எடுத்தாலும் விமர்சன ரீதியாகவும், வசூலிலும் பெரும் வரவேற்பு பெற்றது. தமிழில் வெற்றியை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. பிலிம்பேர் சிறந்த இயக்குனர், சிறந்த படத்திற்கான விருது சுப்ரமணியபுரம் படத்திற்கு வழங்கப்பட்டது.

அழகர், பரமன், காசி, டோபா, தும்கா ஆகியயோர் வேலையில்லாமல் நண்பர்களாக இருந்து வருகின்றனர். முன்னாள் கவுன்சிலர் சோமு மற்றும் அவரது சகோதரர் கனகு ஆகியோரின் வீட்டிற்கு எதிரே உள்ள தெருக்களில் ஜாலியாக நேரத்தை கடத்துகிறார்கள்.
சோமு மற்றும் கனகு ஆகியோருக்கு எதாவது பிரச்னை வந்தால் முதல் ஆளாக சென்று உதவி வந்தனர். அழகர் சோமுவின் வீட்டில் இருக்கும் துளசியை காதலித்து வருவார். இதை அறிந்த பரமன் இதற்க்கு எதிராக அவ்வப்போது பேசி வருவார்.
கோவில் திருவிழாவின் போது சோமுவிற்கு சரியான மரியாதையை கிடைக்காததால் மனவருத்தம் அடைகிறார் கனகு. இதனால் கோவில் நிர்வாகியாக இருக்கும் ஆளும் கட்சியை சேர்ந்தவரை பலி வாங்க அழகர், பரமன், காசி ஆகியோரை அழைத்து கொலை செய்ய திட்டமிடுகின்றனர் கனகு.
திட்டமிட்டபடி கொலை செய்து முடித்த பின்னர் பரமன், அழகர் இருவரும் கொலை செய்ததாக முன்வந்து சிறைக்கு செல்கின்றனர். சோமு மற்றும் கனகு இருவரும் பெயில் எடுப்பார்கள் என சிறையில் இருந்து வருகின்றனர் அழகாரும், பரமனும்.

அழகர், துளசி காதலிக்கும் விஷயம் சோமு வீட்டிற்கு தெரிய வர வேறு சில ஆட்களை வைத்து அழகரை கொலை செய்து விடுகின்றனர். இதை அறிந்த பரமன் சோமு, கனகு ஆகியோரை பழிவாங்கி கொலை செய்து விடுகிறார்.
கூடவே இருந்து வரும் காசி பரமனை சந்திக்கும் போது வேறு சில ஆட்கள் பரமனை கொலை செய்ய வரும் போது உதவாமல் அங்கிருந்து தப்பி விடுகிறார். பல ஆண்டுகளாக ஒன்றாகவே இருந்து வந்த காசி இப்படி செய்ததை சற்றும் எதிர்பார்க்காத பரமன் கொலை செய்யப்படுகிறார்.
28 வருடங்களுக்கு பிறகு காசுக்காக தான் காசி இதை செய்தது தெரியவர டோபா என்பவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வரும் காசியை பார்க்க சென்று, செயற்கை சுவாச கருவியை அகற்றிவிட்டு சென்றுவிடுவார்.
அழகரை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்திக்கொண்டு வரும் போது அவர்களிடமிருந்து தப்பி ஒரு வீட்டில் தஞ்சம் அடையும் அழகர். அப்போது “பரமா எனக்கு சாவு பயத்தை காட்டிட்டாங்க” என்று கதறும் டயலாக் பார்க்க அருமையாக இருந்தது. பின்னாளில் இது மீம், ரீலிஸ் போன்ற சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆக இருந்தது.
ஜேம்ஸ் வசந்தன் இசையில் “கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்” பாடல் காதலை இருவரும் பேசாமல் கண்கள், உடல் மொழியால் பரிமாறிமாறிக் கொண்டதை அழகாக காட்டியிருப்பார்.
“மதுரை குலுங்க குலுங்க நீ நையாண்டி பாட்டு படி” பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்து அன்று முதல் இன்றுவரை கோவில் திருவிழாக்களில் ஒலித்த வண்ணம் இருந்து கொண்டே உள்ளது.

சசிகுமார் முதல் முதலில் சினிமாவில் லீட் ரோலில் அறிமுகமான படம் என்றாலும் கதைக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருப்பார். ஜெய், சசிகுமார், கஞ்சா கருப்பு ஆகியோர் காமெடி ரசிக்க வைத்திருக்கும். படம் முழுவதும் எதார்தமாகவும், நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வை அழகாகவும் காட்டியிருப்பார்.
அழகர் | ஜெய் |
பரமன் | சசிகுமார் |
கனகு | சமுத்திரக்கனி |
துளசி | சுவாதி |
காசி | கஞ்சா கருப்பு |
தும்கா | மாரி |
டோபா | விசித்திரன் |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]