Home Cinema News பேயாக மிரட்டும் தமன்னா… எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘அரண்மனை 4’ ட்ரெய்லர்!

பேயாக மிரட்டும் தமன்னா… எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘அரண்மனை 4’ ட்ரெய்லர்!

by Sivaanantham RB

Aranmanai 4 : தமிழில் ஏற்கனவே வெளியான ‘அரண்மனை‘யின் 3 பார்ட்களும் ஹிட்டடித்ததால், இப்போது இதன் பார்ட் 4-ஐ இயக்கி, நடித்திருக்கிறார் சுந்தர்.சி. இதில் பிரபல நடிகை தமன்னா தான் பேயாக மிரட்டப்போகிறாராம். 

மேலும், மிக முக்கிய ரோல்களில் ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ், கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், டெல்லி கணேஷ், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் நடித்துள்ளார்கள். இதற்கு பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார், ஈ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இன்று (மார்ச் 30-ஆம் தேதி) சென்னையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா, இயக்குநர் சுந்தர்.சி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

12 ஆண்டுகளுக்கு பிறகு “சாமானியனாக” ரீ என்ட்ரி தந்த Ramarajan…

தற்போது, யூடியூபில் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.