Home Cinema News 50 நாட்களைக் கடந்து அதிரடி காட்டும் ‘அரண்மனை 4’!

50 நாட்களைக் கடந்து அதிரடி காட்டும் ‘அரண்மனை 4’!

'Box Office' ஹிட்டாக திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கும் அரண்மனை 4.

by Sruthi Balasubramanian

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளோடு வலம் வருபவர் சுந்தர் சி. இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘அரண்மனை 4’. ராஷி கண்ணா, தமன்னா, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா என பலர் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

அரண்மனை 4 50th day poster

இந்த படம் 100 கோடியைத் தாண்டி வசூல் சாதனை படைத்து 2024-ல் அதிகம் கொண்டாடப்பட்ட படங்களில் ஒன்றாக இடம் பிடித்திருக்கிறது. இந்த படம் வெளியாகி இன்றோடு 50 நாட்கள் ஆகும் நிலையில் மக்கள் தந்த மாபெரும் வெற்றிக்கு நன்றி தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. 

படம் ரிலீஸாகி 50 நாட்களைக் கடந்த நிலையிலும் இன்னும் சில திரையரங்குகளில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Aranmanai 4

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.