சமீபத்தில் குஷ்பு சுந்தர் துணை தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் பூஜைகள் போடப்பட்டுப் படப்பிடிப்பு கோலாகலமான கொண்டாட்டங்களுடன் நடைபெற்றது. அதை தொடர்ந்து, குஷ்பு சுந்தர் தயாரிக்கும் அடுத்த படமான ‘Production 7’ படத்திற்கான படப்பிடிப்பு பூஜைகள் போடப்பட்டு அற்புதமாக இன்று துவங்கியுள்ளது.
இப்படத்தை இயக்குனர் அஸ்வின் கந்தசுவாமி இயக்குகிறார். இப்படத்தையும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் துணை தயாரிப்பு நிறுவனமான Avni Cinemax தயாரிக்கிறது. இந்தப் படப்பிடிப்பு பூஜையில் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி, நடிகை குஷ்பு சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், படப்பிடிப்பு பூஜையில் கலந்து கொண்ட நடிகை ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா வி மற்றும் நடிகர் சந்தோஷ், வினோத் கிஷான் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
With blessings from above and the wishes of our loved ones, we step into the quirky and fun-filled #Production7🎉
— Avni Cinemax (@AvniCinemax_) March 12, 2025
Let’s DO this 🔥
A film by @aswin_tweet🎬
Produced by #AvniCinemax #BenzzMedia @khushsundar #AnanditaSundar pic.twitter.com/rro41FNnZk
Read More: பிரமாண்டமாகத் துவங்கியுள்ள நடிகை நயன்தாரா – வின் ‘மூக்குத்தி அம்மன் 2’ படப்பிடிப்பு!
‘Production 7’ எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டுப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.இதற்கு முன், குஷ்பு சுந்தரின் துணை தயாரிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் அம்மனை மையமாக கொண்ட ஒரு ஆன்மீக கதை களத்தையுடையது என்பது அனைவரும் அறிந்தது. அந்த படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து தொடங்கியுள்ள இப்படம் எப்படிப் பட்ட கதைகளத்தை கொண்டதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவிவருகிறது.
‘Production 7’ படக்குழு
நடிகர்கள் | ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா வி, சந்தோஷ், மற்றும் வினோத் கிஷான் |
இயக்குனர் | அஸ்வின் கந்தசுவாமி |
தயாரிப்பாளர் | குஷ்பு சுந்தர் |
தயாரிப்பு நிறுவனம் | Avni Cinemax, Benzz Media |
வெளியீட்டு தேதி | TBA |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]