தெலுங்கு குடும்பத்தில் பிறந்த சந்தீப் கிஷன் 2010 முதல் நடித்து வந்த நிலையில் 2013-ல் யாருடா மகேஷ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
1987-ல் பிறந்த சந்தீப், தெலுங்கு சினிமா பக்கம் செல்வதற்காக 2008-ல் ஹைத்ராபாத் பகுதிக்கு சென்றார். சினிமாவில் தன்னை நிரூபிக்க முதலில் கெளதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.
பின்னர் 2010-ல் பிரஸ்தானம் படத்தில் நெகட்டிவ் ரோலிலும், சினேகா கீதம் படத்தில் ஹீரோவாகவும் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். பின்னர் Shor in the City என்ற ஹிந்தி படத்தில் நடித்தார்.
அதனை தொடர்ந்து 2013-ல் R. மதன் குமார் இயக்கத்தில், கோபி சுந்தர் இசையில் சந்தீப், டிம்பிள் சோப்டே, ஜெகன், ரோபோ சங்கர், சிங்கமுத்து, லிவிங்ஸ்டன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ” யாருடா மகேஷ்“. தமிழில் ஹீரோவாக அறிமுகமான சந்தீப் இந்த படத்தில் பேர் சொல்லும்படியாக நடித்திருந்தார்.
பின்னர் தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருந்து வந்த சந்தீப் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2017-ல் வெளியான “மாநகரம்” படத்தில் நடித்து கவனிக்க வைத்தார். ஆக்சன் த்ரில்லர் படமாக ரசிக்கும் படி பெரிய வரவேற்பை பெற்றது. ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா, சார்லே, முனீஷ்காந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.
பின்னர் சுசீந்திரன் இயக்கத்தில், D. இமான் இசையில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்தார். விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாதா, சந்தீப், சூரி ஆகியோர் நடித்திருந்தனர். CV. குமார் இயக்கத்தில் சந்தீப், லாவண்யா, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, மீம் கோபி, பகவதி பெருமாள் ஆகியோர் நடித்து வெளியான படம் “மாயவன்”.
இந்த இரண்டு படங்களும் சந்தீப்பிற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தாலும் தனது நடிப்பில் ரசிக்கும் படி செய்திருப்பார். 2021-ல் சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியான ” கசடதபற” என்ற Anthology படத்தில் நடித்தார். பிரேம்ஜி, சந்தனு பாக்கியராஜ், சந்தீப் கிஷன், ஹாரிஸ் கல்யாண், விஜயலட்சுமி, வெங்கட் பிரபு போன்ற திரை பிரபலங்கள் தனி தனி கதைகளில் நடித்து ஒன்றாக சேர்த்து படமாக்கப்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், GV. பிரகாஷ் குமார் இசையில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் கேப்டன் ரஃபிக் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இவரது நடிப்பு கவனிக்கும் வகையில் இருந்தது. தற்போது தனுஷ் இயக்கத்தில் வெளியான ராயன் படத்தில் முத்துவேல்ராயன் கேரக்டரில் நடித்துள்ளார்.
மாநகரம் படத்தில் தொடங்கி நெஞ்சில் துணிவிருந்தால், கசடதபற, கேப்டன் மில்லர், ராயன் என பெரும்பாலும் இரண்டு, மூன்று கேரக்டர்கள் முக்கிய ரோலில் நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் தன்னை நிரூபிக்க காத்துக்கொண்டிருக்கிறார்.
ராயன் படத்தில் இயல்பான படிப்பில் கவனிக்க வைத்திருப்பார்.
சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான தமிழ் படங்கள்.
படங்கள் | வெளியான தேதி | கேரக்டர்கள் | நடிகர்கள் | இயக்குனர்கள் |
யாருடா மகேஷ் | 26 ஏப்ரல் 2013 | சிவா | சந்தீப், டிம்பிள் சோப்டே, ஜெகன், ரோபோ சங்கர், சிங்கமுத்து, லிவிங்ஸ்டன் | R. மதன் குமார் |
மாநகரம் | 10 மார்ச் 2017 | ஸ்ரீ, சந்தீப், ரெஜினா, சார்லே, முனீஷ்காந்த் | லோகேஷ் கனகராஜ் | |
நெஞ்சில் துணிவிருந்தால் | 10 நவம்பர் 2017 | குமார் | விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாதா, சந்தீப், சூரி | சுசீந்திரன் |
மாயவன் | 14 டிசம்பர் 2017 | குமரன் | சந்தீப், லாவண்யா, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, மீம் கோபி, பகவதி பெருமாள் | CV. குமார் |
கசடதபற (Anthology movie) | 27 ஆகஸ்ட் 2021 | கந்தா | பிரேம்ஜி, சந்தனு பாக்கியராஜ், சந்தீப், ஹாரிஸ் கல்யாண், விஜயலட்சுமி, வெங்கட் பிரபு | சிம்பு தேவன் |
கேப்டன் மில்லர் | 12 ஜனவரி 2024 | கேப்டன் ரஃபிக் | தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப், அதிதி பாலன் | அருண் மாதேஸ்வரன் |
ராயன் | 26 ஜூலை 2024 | முத்துவேல்ராயன் | தனுஷ், சந்தீப், காளிதாஸ் ஜெய்ராம், SJ. சூர்யா, துஷார விஜயன். | தனுஷ் |