2000 ஆண்டுகளில் காமெடி என்றால் நாகேஷ், கவுண்டமணி, செந்தில், விவேக், Vadivelu போன்ற ஜாம்பவான் காமெடி நடிகர்கள் தான் நம் நினைவிற்கு வருவார்கள். படத்திற்கு காமெடி என்பது கூடுதல் பலம் என்றே கூற வேண்டும். ஒரு சில படங்கள் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் அந்த படத்தில் காமெடி நன்றாக இருந்தால் படம் ஹிட்.
காமெடிக்காகவே படத்தை பார்க்க சென்றவர்களும் ஏராளம். அப்படிப்பட்ட காமெடிகளை தனது படங்களில் தந்து மக்களை மகிழ்விக்கும் நடிகர் தான் வடிவேலு. பேச்சு, உடல் மொழி என மேல்தோற்றத்தை வைத்தே சிரிப்பை ஏற்படுத்தவும் வல்லமை கொண்டவர் வடிவேலு.
வடிவேலு மற்றும் சுந்தர் சி இருவரும் இணைந்து ஒரு சில படங்களில் தந்த கேரக்டர்கள், காமெடிகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரசிக்கவைத்துக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட காமெடிகளை மீண்டும் மீண்டும் யோசித்து பார்க்கும் போதெல்லாம் சிரிப்பை வரவைக்கும்.
வின்னர் – கைப்புள்ள

Sunder. c இயக்கத்தில் வடிவேலு ‘வின்னர்’ படத்தில் “கைப்புள்ள” கேரக்டரில் செய்யும் அட்டகாசம் இவ்வளவு தான் என்று இல்லை. வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற பெயரில் 4,5 அல்லக்கைகளை வைத்துக்கொண்டு ஊரில் பெரிய வீராதி வீரர் போல vadivelu செய்யும் சேட்டைகள் தூக்கத்தில் கூட சிரிப்பை வரவைக்கும். ரியாஸ் கானிடம் வம்பிழுக்கும் வடிவேலு, நம்பியார், எம்.என். ராஜமிடம் திட்டு வாங்கும் போதும், பிரசாந்திடம் ஓவராக பில்டப் செய்யும் போதும், ஊரில் நக்கலாக வளம் வரும் போதும் என எல்லா இடங்களிலும் வடிவேலு செய்யும் செயல்கள், காமெடிகள் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. இன்றளவும் கைப்புள்ள கேரக்டரை ரசித்து கொண்டாடி வருகின்றனர்.
கிரி – வீரபாகு

சுந்தர் சி இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வந்த ‘கிரி’ படத்தில் “வீரபாகு” கேரக்டர் மற்றுமொரு சிரிப்பு வெடி. பேக்கரி வைத்திருக்கும் வீரபாகுவிடம் வேலைக்கு சேரும் அர்ஜுன். பேக்கரி கிடைத்த கதையை சொல்லும் vadivelu, அதை வடிவேலுக்கு தெரியாமல் ஊர் முழுவதும் தெரியப்படுத்துவது, அதற்கு வடிவேலு தரும் ரியாக்சன் என படம் முழுவதும் வடிவேலு சிரிப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடித்திருப்பார்.
லண்டன் – வக்கீல் வெடிமுத்து

சுந்தர் சி இயக்கிய ‘லண்டன்’ படத்தில் “வக்கீல் வெடிமுத்து” வாக ரசிக்க வைத்திருப்பார். படம் ஓரளவு மட்டுமே ஹிட் ஆனா நிலையில் வடிவேலு காமெடி கலக்கியது. தனது மனைவிக்கு பயந்து வடிவேலு செய்யும் சேட்டைகள், பிரசாந்த், பாண்டியராஜன் ஆகியோரை கண்டு பயக்கும் வடிவேலு என காமெடியில் ரசிக்க வைத்திருப்பார்.
தலை நகரம் – நாய் சேகர்

‘தலைநகரம்‘ படத்தில் சுந்தர். சி உடன் “நாய் சேகர்” கேரக்டரில் நடித்து கலக்கியிருப்பார். கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் வடிவேலு ரவுடி கும்பலிடம் இருந்து தப்பிக்க “நாய்சேகர்” என்ற பெயரை வைத்துக்கொள்வார். பின்னர் போலீஸிடம் “நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான்” என்று ஜீப்பில் ஏறும் காட்சி, சுந்தர் .சி இடம் ரவுடி போல பில்டப் செய்யும் காட்சி, ஹீரோயின் இடம் ரொமான்ஸ் என்ற பெயரில் செய்யும் காமெடி, நாய்சேகர் என்ற பெயரில் போட்டிருக்கும் கேட்டப் போன்றவை நகைச்சுவையின் உச்சம் என்றே கூற வேண்டும். வடிவேலுவின் “நாய்சேகர்” காமெடி கதாபாத்திரம் காமெடி கிங் என்றே கூறலாம்.
நகரம் – ஸ்டைல் பாண்டி

நகரம் படத்தில் திருட்டு தனம் செய்யும் “ஸ்டைல் பாண்டியாக” செய்யும் காமெடிகள் அளவற்றவை. படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் சுந்தர் சி, வடிவேலு காமெடிக்கு என்று ஒரு ஃபேன்பேஸ் உருவானது. வடிவேலுவின் 100-வது திருட்டை போஸ்டர் அடித்து கொண்டாடும் அல்லக்கைகள், சுந்தர். சி இடம் “என் ஏரியாக்கு வாடா பாத்துக்கலாம்” என்று வீராப்பாக கூறி விட்டு பின்னர் சுந்தர் சி காலில் விழும் காட்சிகள் அல்டிமேட் காமெடி என்றே சொல்லலாம்.
ஹீரோயின் வீட்டில் டிவி ஆண்டனாவை சரி செய்யும் காட்சி, ஹீரோயினை சைட் அடிக்க செய்யும் ஒரு சில விஷயங்கள், வடிவேலுவின் அல்லக்கை ஒருவரின் அண்ணன்கள் வடிவேலுவை மிரட்டும் காட்சி என வடிவேலு காமெடி தான் படத்தின் ஹீரோ என்றே கூறலாம். அந்த அளவிற்கு காமெடியில் கலக்கியிருப்பார்.
சுந்தர் சி, vadivelu காம்போவை மீண்டும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான விஷயம். தற்போது சுந்தர் சி, வடிவேலு காம்போவில் “கங்கேர்ஸ்” படத்தில் சிங்காரம் என்ற வடிவேலு நடிக்கவுள்ளார்.
அப்படி நடந்தால் கைப்புள்ள, வீரபாகு, நாய்சேகர், ஸ்டைல் பாண்டி, வக்கீல் வெடிமுத்து போன்ற காமெடி கதாபாத்திரத்தை போல மற்றுமொரு மாஸ்டர் க்ளாஸ் கதாப்பாத்திரத்தை தருவார்கள் என எதிர்பார்க்கலாம்.
vadivelu கூறும் டயலாக்குகள் மீம் கிரியேட்டர்களுக்கு கண்டென்ட்களுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்துவருகிறது. பேஸ்புக், வாட்ஸஅப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களில் எந்த பக்கம் திரும்பினாலும் வடிவேலுவின் டயலாக் தான்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]