பொதுவாக இயக்குநர் ஒரு திரைப்படத்துக்கு கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்குவார். அவர் எழுதும் கதை அவரை பாதித்த ஒரு சம்பவமாகவோ, அவர் படித்த சம்பவமாகவோ இருக்கலாம். அப்படி அந்த இயக்குநர் படித்ததில், அவருக்கு பிடித்த நாவல் ஒன்றையும் படமாக்கலாம். தமிழில் சில இயக்குநர்கள் இதை செய்திருக்கிறார்கள். நாவலை மையமாக வைத்து தமிழில் எடுக்கப்பட்டு சூப்பர் ஹிட்டான படங்களின் லிஸ்ட் இதோ…
அசுரன்

2019-ல் நடிகர் தனுஷ் – இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி வேற லெவல் ஹிட்டான படம் ‘அசுரன்’. இந்த படம் பூமணி எழுதிய ‘வெக்கை’ என்ற நாவலை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டது. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் மஞ்சு வாரியர், பசுபதி, டிஜே அருணாச்சலம், கென் கருணாஸ் நடித்திருந்தார்கள். ‘வெக்கை’ நாவலை அமேசானில் வாங்கி படிக்கலாம், ‘அசுரன்’ திரைப்படத்தை ‘அமேசான் ப்ரைம்’ OTT தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.
விசாரணை

2016-ல் நடிகர் தினேஷ் – இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘விசாரணை’. இந்த படம் மு.சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ என்ற நாவலை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டது. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, ஆனந்தி, முருகதாஸ், கிஷோர், அஜய் கோஷ் நடித்திருந்தார்கள். ‘லாக்கப்’ நாவலை அமேசானில் வாங்கி படிக்கலாம், ‘விசாரணை’ திரைப்படத்தை ‘நெட்ஃப்ளிக்ஸ்’ OTT தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.
குற்றம் 23

2017-ல் நடிகர் அருண் விஜய் – இயக்குநர் அறிவழகன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான படம் ‘குற்றம் 23’. இந்த படம் க்ரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார் எழுதிய ‘எண்ணி எட்டாவது நாள்’ என்ற நாவலை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டது. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் மஹிமா நம்பியார், வம்சி கிருஷ்ணா, அபிநயா, தம்பி இராமையா நடித்திருந்தார்கள். ‘எண்ணி எட்டாவது நாள்’ நாவலை அமேசானில் வாங்கி படிக்கலாம், ‘குற்றம் 23’ திரைப்படத்தை ‘ஜீ5’ OTT தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.
கொலைகாரன்

2019-ல் நடிகர் விஜய் ஆண்டனி – இயக்குநர் ஆண்ட்ரு லூயிஸ் கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘கொலைகாரன்’. இந்த படம் கெய்கோ ஹிகாஷினோ எழுதிய ‘The Devotion of Suspect X’ என்ற ஜப்பானிய நாவலை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டது. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அஷிமா நர்வால், சீதா, நாசர், பகவதி பெருமாள் நடித்திருந்தார்கள். ‘The Devotion of Suspect X’ நாவலை அமேசானில் வாங்கி படிக்கலாம், ‘கொலைகாரன்’ திரைப்படத்தை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ OTT தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.
சூரரைப் போற்று

2020-ல் நடிகர் சூர்யா – இயக்குநர் சுதா கொங்கரா கூட்டணியில் வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘சூரரைப் போற்று’. இந்த படம் G.R.கோபிநாத் எழுதிய ‘Simply Fly : A Deccan Odyssey’ என்ற நாவலை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டது. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், கருணாஸ், காளி வெங்கட், கிருஷ்ணகுமார், ஊர்வசி, ‘பூ’ ராமு நடித்திருந்தார்கள். ‘Simply Fly : A Deccan Odyssey’ நாவலை அமேசானில் வாங்கி படிக்கலாம், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை ‘அமேசான் ப்ரைம்’ OTT தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]