ரஜினிகாந்த் என்றாலே நினைவுக்கு வருவது அவருடைய ஸ்டைல் தான். ஸ்டைல் என்பதை தாண்டி ஒவ்வொரு படத்திற்கும் ஒரு ஒரு டயலாக் மூலம் தியேட்டரில் விசில் பறக்க வைப்பார்.
ரஜினிகாந்த் நடித்த படங்களில் இருந்து பேசிய மாஸ் டயலாக்குகள்.
16 வயதினிலே படத்தில் ரஜினிகாந்த் -ன் பரட்டை கேரக்டர் அவரின் சினிமா வாழ்வில் பெயர் சொல்லும்படியான கதாப்பாத்திரம். “இது எப்படி இருக்கு” என்ற ரஜினியின் டயலாக் மாஸ் என்றே கூறலாம்.

தர்ம துரை படத்தில் காலத்திற்கு ஏற்ற வசனமாக “நல்லவனா இருக்கலாம் ஆனால் ரொம்ப நல்லவனா இருக்ககூடாது” என்று அறிவுரை கூறியிருப்பார்.
முரட்டு காளை படத்தில் “சீவிடுவேன்” என்று சொல்லும் ஒரு சிறிய வார்த்தையை கூட மாஸ் டயலாக் ஆக சொல்லியிருப்பார் ரஜினிகாந்த்.
மூன்று முகம் படத்தில் வில்லனிடம் “தீ பெட்டிக்கு இரண்டு பக்கம் உரசினால் தான் தீ பிடிக்கும், ஆனால் இந்த அலெஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் உரசினாலும் தீ பிடிக்கும்” என்று தனது கோபத்தை கூட ரசிக்கும் படியான டயலாக் மூலம் கூறியிருப்பார்.
முத்து படத்தில் சரியான நேரத்திற்கு வர வேண்டும் என்பதை கூட தனது மாஸ் டயலாக் மூலம்

“நான் எப்போ வருவேன், எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியது. ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்” என்று கூறியிருப்பார்.
கடவுள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள ரஜினி அருணாச்சலம் படத்தில் கடவுள் செல்வதை தான் செய்வதாக
“ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்றான்” என்ற டயலாக் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியிருப்பார்.
“நான் சொல்றதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன்” என்று அண்ணாமலை படத்தில் கூறியிருப்பார்.

“புருஷன் வீட்டுல நடக்கிறத பிறந்த வீட்டில் சொல்றவ பொம்பள இல்ல, ஆனால் தங்கச்சிக்கு நடக்குற கொடுமையை பார்த்துட்டு சும்மா இருக்கறவன் ஆம்பள இல்ல”
“கேட்டு போனவன் வாழலாம், ஆனால் நல்ல வாழ்ந்தவன் கேட்டு போக கூடாது”.
“கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைச்சா என்றைக்கும் நிலைக்காது.” என்று வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களை கூட அறிவுரையாக கூறியிருப்பார்.
இவ்வாறு வாழ்க்கை தத்துவத்தை தனது மாஸ் டயலாக் மூலம் மக்களுக்கு கொண்டு சென்றார்.
“நீ விரும்புறவன கட்டிக்கிறதா விட, உன்ன விரும்புறவன கட்டிக்க, வாழ்க்கை நல்ல இருக்கும்” என வள்ளி படத்தில் கூறியிருப்பார்.
பாட்சா படத்தில் “நான் ஒரு தடவ சொன்ன நூறு தடவ சொன்ன மாறி” என்ற வசனத்திற்கு இன்றளவும் இணையான வசனம் தமிழ் சினிமாவில் இல்லை என்றே கூறலாம்.

“நல்லவங்களா ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கைவிட மாட்டான். கெட்டவர்களுக்கு ஆண்டவன் நெறய கொடுப்பான் ஆனால் கை விட்ருவான்”.
படையப்பா படத்தில் எந்த அளவிற்கு ஸ்டைலில் மிரட்டியிருப்பாரோ அதே அளவிற்கு மாஸ் டயலாக் மூலம் கலக்கியிருப்பார்.

“அதிகமா ஆசை பட்றா ஆம்பளையும், அதிகமா கோவப்பட்ற பொம்பளையும் நல்ல வாழ்ந்தா சரித்திரமே கிடையாது”
“என் வழி தனி வழி, சீண்டாத ” தாங்க மாட்ட என்ற மாஸ் டயலாக் என்றும் ரசிக்க வைக்கும்.
பொல்லாதவன் படத்தில் முதலாளிங்க தாடி வளத்த பிஸினு அர்த்தம், தொழிலாளிங்க தாடி வளர்த்த பசினு அர்த்தம் என தொழிலாளிகள் படும் கஷ்டத்தை கூறியிருப்பார்.
பாபா படத்தில் “அசந்த அடிக்கிறது உங்க பாலிசி, அசராம அடிக்கிறது இந்த பாபா பாலிசி” என்றும், “நான் யோசிக்காம பேச மாட்டேன், பேசுனா பிறகு யோசிக்க மாட்டேன்” என்றும், ” கதம் கதம், முடிஞ்சது முடிஞ்சு போச்சு” என்று மாஸ் ஆக கூறியிருப்பார்.

மன்னன் படத்தில் என்னதான் துணிச்சல் இருந்தாலும், பெண்கள் பொறுமையா இருந்தால் தான் பெருமையை வாழ முடியும்” என்று பெண்களுக்கு அறிவுரை கூறியிருப்பார்.
சிவாஜி படத்தில் “பேர கேட்டாலே சும்மா அதிருதுல” என்ற டயலாக் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரசித்து கொண்டாட வைத்தது.

“கண்ணா பன்னிங்க தா கூட்டமா வரும் சிங்கம் சிங்கள தா வரும்” என்று தான் அனைத்தையும் சமாளிக்கும் திறமை கொண்டவன் என்று மாஸ் டயலாக் மூலம் கூறியிருப்பார்.
குசேலன் படத்தில் ” வாழு மத்தவங்கள வாழ வெச்சுட்டு வாழு, மத்தவிங்க வாழ்க்கையை கேடுத்துட்டு வாழாத” என்று அனைவருக்கும் அறிவுரை கூறியிருப்பார்.
பேட்ட படத்தில் ” சிறப்பான தரமான சம்பவம் இனிமேல் தான் பாக்க போறிங்க” என்று சண்டைக்கு முன்பு பேசும் டயலாக் மாஸ் என்றே கூறலாம்.

கபாலி படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்திருந்த போது அதை தெரிவிக்கும் வகையில் ” நா வந்துட்டேனு சொல்லு, திரும்ப வந்துட்டேனு சொல்லு” என்ற டயலாக் ரஜினிக்கு காம்பேக் ஆக அமைந்தது.
காலா படத்தில் “கியாரே சேட்டிங்க் ஆ, வேங்கை மகன் ஒத்தைல நிக்க தில் இருந்தா மொத்தமா வாங்கடா” என்று பேசிய டயலாக் ரசிக்க வைத்தது.

எந்திரன் படத்தில் “who is the ப்ளாக்க்ஷீப்” வாசி மேஹ்ஹ்ஹ்ஹ்ஹ” என்ற வசனம் மாஸ். “ரோபோ” என்று கிண்டலாக பேசும் வசனம் ரசிக வைத்தது.

ரஜினிகாந்த் அவர்கள் அறிவுரை, வாழ்கை தத்துவம், நடைமுறை உண்மைகள் என தனது மாஸ் டயலாக் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி வந்துள்ளார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com