தமிழ் சினிமாவில் ஒரே ஒரு Super Star தான் என்று பலர் கூறுவர். அந்த பட்டத்துக்கு சொந்தம் கொண்டாட போட்டிகளும் நிலவுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டதையே மாறுபடுத்தி பட்டமாக வைத்திருக்கும் தமிழ் நடிகர்களின் பட்டியல்.
‘Super Star’ ரஜினிகாந்த்

தன்னுடைய இயல்பான உடல் மொழியாலும் திரையில் அவருக்கென தனி ஸ்டைலை உருவாக்கி தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ரஜினிகாந்த். ஆக்ஷன் நாயகனாக, விறுவிறுப்பான படங்களில் நடித்து அவருக்கான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். 1978ல் ‘பைரவி’ படத்தின் வெற்றிக்கு பிறகு தயாரிப்பாளர் S தானு அவர்களால் தரப்பட்ட பட்டம் தான் ‘Super Star‘. தனக்கு பட்டம் எதுவும் வேண்டாம் என்று முதலில் ரஜினிகாந்த் நிராகரித்தாலும், அதுவே அவருக்கு ஒரு அடையாளமாக மாறியுள்ளது.
‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா

பல ஆண்டுகளாக தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் முன்னணி நடிகையாக உள்ளார் நயன்தாரா. முதலில் ஹூரோக்களுடன் டூயட் பாடி நடித்தவர் நடுவில் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தார். அப்போது புதுமையான கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்தார். அப்படி 2018ல் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘Lady Super Star’ என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ சிம்பு

குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய தந்தை டி ராஜேந்தர் படங்களில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் சிம்பு. சிறுவயதில் அவரின் நடிப்பை பாராட்டி டி ராஜேந்தர் வைத்த பட்டம் தான் ‘Little Super Star’. அவரே வளர்ந்து வந்து பல ஹிட் படங்களில் நடித்ததால் இந்த பட்டத்தை வைத்துக் கொண்டார். ஆனால் 2015ல் ‘வாலு’ படத்துக்கு பின்னர் இந்த பட்டத்தை விட்டுவிட்டார் நடிகர் சிம்பு.
‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ சிவா

எத்தனையோ நடிகர்கள் பல ஆண்டுகள் நடித்து பட்டம் பெற்றாலும், தன்னுடைய நகைச்சுவை திறமை, நடிப்பு மற்றும் பன்முகத்தன்மையால் ‘தமிழ் படம்’, ‘சென்னை 600028’, ‘கலகலப்பு’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சிவா. தன்னுடைய ஈடு இணையில்லா நடிப்பால் ரசிகர்களாலேயே கொடுக்கப்பட்ட பட்டம் தான் ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]