Home Cinema News Suriya 44- மிரட்டலான ரெட்ரோ வேடத்தில் சூரியா! 

Suriya 44- மிரட்டலான ரெட்ரோ வேடத்தில் சூரியா! 

கார்த்திக் சுப்புராஜின் ஹீரோவாக Suriya 44ல் ரெட்ரோ லுக்கில் மீசையும் முல்லட் உடன் முழுமையாக மாறிய நடிகர் சூரியா! 

by Vinodhini Kumar

கார்த்திக் சுப்புராஜின் ஹீரோவாக Suriya 44ல் ரெட்ரோ லுக்கில் மீசையும் முல்லட் உடன் முழுமையாக மாறிய நடிகர் சூரியா! 

Suriya 44 படத்தில் நடிகர் சூரியாவின் கதாப்பாத்திரத்தை ரசிகர்களுக்காக வீடியோ வழியாக வெளியிட்டுள்ளது படக்குழு. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூரியா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜோ ஜார்ஜ் நடிக்கும் படம் Suriya 44. 

Suriya 44 Character poster

நேற்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகர் சூரியா தங்களின் வலைதளங்களில் சூரியா 44 படத்தின் புதிய அப்டேடை வெளியிட்டுள்ளனர். இதில் பெட்டிகளுடன் நடிகர் சூரியா பின்னால் திரும்பி உட்கார்ந்து, உயரமான இடத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருப்பார். வீடியோவின் முடிவில் கேமராவை பார்த்து வில்லதனமாக சிரிப்பது போலும் வீடியோவில் உள்ளது. இதை ‘X’ தளத்திலும் இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார்கள். 

இந்த படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படம்பிடித்த முதல் ஷாட் இது என்றும் பதிவிட்டுள்ளார். உடன் #LoveLaughWar என்ற டேக் இருக்கும். இதுவே படத்தின் டேக் லைன் என்றும் தெரிகிறது. இந்த படத்தின் இசையை சந்தோஷ் நாராயணன் அமைக்கிறார், ஒளிப்பதிவு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா. ஏற்கனவே இந்த​ படத்தின் வில்லனாக​ நடிகர் விஜய் குமார் நடிப்பதை தகவலாக​ வெளியிட்டனர். படப்பிடிப்பு தொடங்கியுள்ளதையும் கதப்பாத்திர​ வீடியோவுடன் தெறிவித்தார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

இதுவரை நடிகர் சூரியாவை இந்த மாதிரியான வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். கார்த்திக் சுப்புராஜின் இயல்பான வெஸ்டர்ன் ரெட்ரோ ஹீரோவை போல புது வேடத்தில் நடிகர் சூரியா மாறியுள்ளது மற்ற நடிகர்களின் பாத்திரங்களை காண ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.