Home Cinema News Suriya 44 படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் இளம் நாயகன்! 

Suriya 44 படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் இளம் நாயகன்! 

நடிகர் சூரியவுக்கு வில்லனாகும் இயக்குனர், எழுத்தாளர், நடிகர் விஜய் குமார். கார்த்திக் சுப்புராஜ் வைத்த அதிரடி டுவிஸ்ட். 

by Vinodhini Kumar

நடிகர் சூரியவுக்கு வில்லனாகும் இயக்குனர், எழுத்தாளர், நடிகர் விஜய் குமார். கார்த்திக் சுப்புராஜ் வைத்த அதிரடி டுவிஸ்ட். 

Suriya 44 படம் வெகு விமரிசையாக படபிடிப்பு தொடங்கிய நிலையில் பெரிய நடிகர் பட்டாளம் நடிப்பது தெரியவந்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களை மகிழ்வித்து வரும் நிலையில் புதிய தகவலை வெளியிட்டுள்ளது படக்குழு. 

Suriya 44 Vijay Kumar

2024ல் அதிகம் எதிர்ப்பார்க்கும் படமாக கார்த்திக் சுப்புராஜ் – சூரியா கூட்டணியில் உருவாகும் பெயரிடப்படாத Suriya 44 படம் இருக்கிறது. இதில் நடிகர் சூரியவுக்கு எதிராக வரும் வில்லனாக இளம் நடிகரும் இயக்குனருமான விஜய் குமார் நடிக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது. 

நடிகர் விஜய் குமார் Suriya 44 வில்லன் பாத்திரத்தில் நடிப்பார் என தகவல் வந்த நிலையில் இவர் இதுவரை கதாநாயகியாக மட்டுமே நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இயக்குனராக சமுதாயத்துக்கு தேவையான படங்களை இயக்கியவர் விஜய் குமார். இப்போது கதாநாயகனாக ‘எலக்ஷன்’ , ‘ஃபைட் கிளப்’ படங்களில் நடித்தார். 

Snapinsta.app 410583141 338959905537366 6754996095553778815 n 1080

விஜய் குமார் இதற்கு முன் சூரியாவுடன் ‘சூரரை போற்று’ படத்தில் பணியாற்றினார். இந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் நடிகர் விஜய் குமார். சினிமாவில் பல துறைகளில் கால் பதித்த இவர் நடிகராக வில்லன் பாத்திரத்தையும் ஒரு பதம் பார்க்க கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்துள்ளார். 

ஏற்கனவே நடிகர் சூரியாவின் 44வது படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பதாகவும், நடிகர்கள் ஜெயராம், ஜோஜோ ஜார்ஜ் மற்றும் பலர் நடிப்பதை படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.