RJ பாலாஜி முதல் முறையாக நடிகர் சூர்யாவுடன் இணைந்து பணியாற்ற உள்ள நிலையில் அந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘Suriya 45’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் பணியாற்ற உள்ள அனைத்து கலைஞர்களின் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது தயாரிப்பு நிறுவனம்.
இதில் கவனத்தை ஈர்த்துள்ள நடிகர்கள் என்று “2018” என்ற மலையாள திரைப்படத்தில் பாஸி என்ற பார்வை குறைபாடு திறன் கொண்ட கதாபாத்திரம் நடித்து பலரின் கவனத்தை கவர்ந்தார். மேலும், அதே திரைப்படத்தில் அரசு அதிகாரியின் மனைவியாய் நடித்த, தமிழில் “அதே கண்கள், கருடன், தீராக் காதல்” போன்ற படங்களில் நடித்த நடிகை சிவாடா Suriya 45 திரைப்படத்தில் இணைந்த மகிழ்ச்சியை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதையடுத்து வெளியான போஸ்டரில் இந்த ஆண்டு வெளியாகி எல்லா விதமான மக்களிடம் பாராட்டுகளை பெற்ற “லப்பர் பந்து” திரைப்படத்தின் சிறந்த துணை நடிகையாக விளங்கும் ஸ்வாசிகா, “காதல் – The Core” படத்தின் நடிகை அனகா மாயா ரவி, தெலுங்கு சினிமாவில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுத்து நடிக்கும் சுப்ரீத் ரெட்டி, இவர்களுடன் கோலிவுட் ஜாம்பவான்களாக திகழ்ந்து வரும் நடிகர் யோகி பாபு, நடராஜன்/நட்டி ஆகியோர் Suriya 45ல் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
Suriya 45 – அதிகாரப்பூர்வ படக்குழு
இயக்குனர் | RJ பாலாஜி |
கதாநாயகன் | சூர்யா |
கதாநாயகி | திரிஷா |
பிற நடிகர்/நடிகைகள் | ஸ்வாசிகாஇந்திரன்ஸ் யோகி பாபு சிவாடா நட்டி/நடராஜன் சுப்ரீத் ரெட்டி அனகா மாயா ரவி |
இசை | சாய் அபியங்கர் |
ஒளிப்பதிவாளர் | GK விஷ்ணு |
சண்டை இயக்குனர் | விக்ரம் மோர் |
எடிட்டர் | R.கலைவாணன் |
கலை இயக்குனர் | அருண் வெஞ்சரமூடு |
தயாரிப்பு நிறுவனம் | Dream Warrior Pictures |
இதுவரை வெளியாகி உள்ள படக்குழுவின் போஸ்டர்களால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.