Home Cinema News இந்த கூட்டணி புதுசா இருக்கே!. Suriya 45 – வது படத்தை இயக்கும் RJ. Balaji. 

இந்த கூட்டணி புதுசா இருக்கே!. Suriya 45 – வது படத்தை இயக்கும் RJ. Balaji. 

சூர்யாவின் கங்குவா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் படத்தை தொடர்ந்து Suriya 45 -வது படத்தை RJ. Balaji இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

by Sudhakaran Eswaran

சூர்யாவின் கங்குவா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் படத்தை தொடர்ந்து Suriya 45 -வது படத்தை RJ. Balaji இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கார்த்தியின் சிறுத்தை படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான சிவா அஜித், ரஜினிகாந்த் என தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்தே படத்தை எடுத்து வந்தார். தற்போது Suriya நடிப்பில் நவம்பர் மாதம் திரைக்குவர காத்திருக்கிறது “கங்குவா”

இந்த படத்தை தொடர்ந்து Suriya 44 படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். மேலும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். நீண்ட நாட்களாக பேசப்பட்டு வரும் வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் “வாடிவாசல்” படம் Suriya 44 படத்தை தொடர்ந்து ஷூட்டிங் ஆரம்பிப்பார்கள் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். 

suriya sivakumar
Source: Instagram

வெற்றிமாறன் “விடுதலை 2” படத்தை எடுத்து வருவதால் வாடிவாசல் படப்பிடிப்பு தாமதமாக தொடங்கும் என தெரிகிறது. இந்நிலையில், Suriya 44 படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் 45-வது படத்தை வர்ணனையாளரும், நடிகரும், இயக்குநருமான RJ. பாலாஜி இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் RJ – வாக இருந்து வந்த பாலாஜி “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தின் மூலம் திரையில் நடிகராக அறிமுகமானவர். 

RJ.பாலாஜி மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம், சிங்கப்பூர் சலூன், LKG, ரன் பேபி ரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களில் இயக்குனராகவும் இருந்துள்ளார். 

Rj balaji
Source: Instagram

Suriya நடிக்கும் 45-வது படத்தை படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள நிலையில் இசையமைப்பாளர் AR. ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்க்கு முன்பு Time Travel படமான 24 படத்திற்கு AR. ரஹ்மான் இசையமைத்திருந்தார். 

அதிக முறை தேசிய விருதை வென்ற ஆஸ்கர் நாயகன் AR. Rahman…

Suriya 45 படத்தின் இயக்குனர் RJ. பாலாஜி தான் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகும். மேலும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகும். 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.