கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிகர் சூரியா ஒரு புதிய gangster கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் Suriya 44. இந்த படத்தின் Glimpse விடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை நடிகர் சூரியா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2D நிறுவனம் தயாரிக்கிறது.

Suriya 44 படத்தில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் ஒரு Retro வேடத்தில் நடிக்கிறார். இதை ஒரு கதாபாத்திர விடியோவாக சமீபத்தில் வெளியிட்டிருந்தார்கள். இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மற்றொரு வீடியோ அப்டேட் வெளியாகியுள்ளது. இதில் கடலோரத்தில் ஒரு இடத்தில் bodyguards சிலர் வரிசையாக நிற்க, நடிகர் சூர்யா முகத்தில் ரத்த கரையுடன் கையில் துப்பாக்கியுடன் நடந்துவருகிறார். விடீயோவின் முடிவில், காமெராவை பார்த்து சுட, ரசிகர்களுக்கு இயல்பான கார்த்திக் சுப்பாராஜ் ஸ்டைலில் ஒரு வெஸ்டர்ன் போஸ்டர் வெளியாகிறது.
An unveiling maverick, ready to conquer 🔥
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) July 22, 2024
Join the frenzy for #LoveLaughterWar and beyond!
Happy Birthday THE ONE ❤️🔥#HappyBirthdaySuriya #HBDTheOneSuriya
Wishes from team #Suriya44@Suriya_Offl @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @rajsekarpandian @kaarthekeyens… pic.twitter.com/JlxJnJB77E
Suriya 44 படத்தின் டைட்டில் மற்றும் டீஸர் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்புடன் வீடியோ அப்டேட் முடிகிறது. சூர்யாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் ‘Happy Birthday The One’ என்ற அசத்தலான போஸ்டர் இந்த விடீயோவின் ஹைலைட்.
சூர்யா நடிப்பில் ஒரு ஆக்ஷன் படமாக உருவாகும் இதில் நடிகர் சூரிய ஸ்டைலான மாஸ் நாயகனாக தோன்றுகிறார். கதாநாயகியாக நடிகை பூஜா ஹேக்டே நடிக்கிறார். நடிகர்கள் ஜெயராம், ஜோஜோ ஜார்ஜ், விஜய் குமார் மற்றும் கருணாகரன் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு வழக்கம்போல் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். நடிகர் சூர்யாவின் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இது ஒரு நல்ல பிறந்தநாள் பரிசு ஆகும். அடுத்த அப்டேட்டில் படத்தின் டைட்டிலை வெளியிட இருப்பது பெரிய ஆவலை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]