சுழல் தி ஓர்ட்டெக்ஸ் வெப்சீரிஸ் (Suzhal – The Vortex), 17 ஜூன் 2022 அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பை, இதன் இயக்குனர்கள் தங்களது X -தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
முதல் சீசனில் 8 எபிசோடுகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கதிர் நடிப்பில் வெளியாகி, தமிழ் வெப்சீரிஸ் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. கிரைம் திரில்லர் பாணியில் உருவான இக்கதையை, மிக அருமையான முறையில் இயக்கி, ரசிகர்களிடம் பிரம்மா & அனுசரண் முருகையன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றனர். பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்த இந்த வெப்சீரிஸ்ஸீன் இரண்டாம் சீசன் விரைவில் அமேசான் ப்ரைமில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
மர்மமாக தொலைந்து போகும் ஒரு இளம்பெண்ணை தொடர்ந்து கதை நகரும் வேலையில் அச்சிறு நகரத்தில் வெளிவரும் பல ரகசியங்களை கொண்டு, மிகவும் சுவாரசியமான முறையில் கதையுடன் பார்வையாளர்களையும் சேர்த்து பயணிக்க வைத்தது. இந்த ஈர்ப்பே இதன் பலமாகி சீசனின் இரண்டாம் பாகத்திற்கான ஆவலை ரசிகர்களின் மத்தியில் உருவாக்கியது.
Top 5 – கட்டாயம் பார்க்க வேண்டிய தமிழ் கிரைம் திரில்லர் web series
இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டமாக X- வலைதளத்தில் வெளியாகியுள்ள சிறு கிளிம்ஸ், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. சுழல் தி ஓர்ட்டெக்ஸ் (Suzhal – The Vortex) – சீசன் 2 பிப்ரவரி 28-ம் தேதி Amazon Prime-இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Some storms never settle.🌪️#SuzhalS2OnPrime, New Season, Feb 28 pic.twitter.com/sHDaA8sjW8
— prime video IN (@PrimeVideoIN) February 11, 2025
சுழல் தி ஓர்ட்டெக்ஸ் -2 படக்குழு
நடிகர்கள் | பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஸ்ரேயா ரெட்டி |
இயக்குனர்கள் | பிரம்மா & அனுசரண் முருகையன் |
எழுத்தாளர்கள் | புஷ்கர்& காயத்ரி |
இசை | ஷாம் சி எஸ் |
தயாரிப்பு | வால்வாட்சர் பிலிம்ஸ் |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]