கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சூழல் தி ஓர்ட்டெக்ஸ் சீசன் 2 (Suzhal – The Vortex Season 2) வெப்சீரிஸ்ஸின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வெப்சீரிஸ்ஸின் முதல் பாகம் 17 ஜூன் 2022 அமேசான் ப்ரைம்மில் வெளியாகி அனைவருக்கும் ஒரு ஈர்ப்பை கொடுத்தது. இந்த ஈர்ப்பே அனைவரையும் சீசன் 2-விற்காக காத்திருக்க வைத்துள்ளது. தமிழ் வெப்சீரிஸ் வரலாற்றில் மிக பெரிய வெற்றியை கொண்டுள்ளது திரில்லர் கிரைம் வெப் சீரிஸ்ஸான சூழல் தி ஓர்ட்டெக்ஸ் சீசன் 1.
இக்கதையில் பல்வேறு சஸ்பென்ஸ் நிறைந்த திடுக்கிடும் திகில் மற்றும் மர்மம் நிறைந்த காட்சிகள் அதிகம் இருக்கும். இக்கதை ஒரு இளம் பெண் காணாமல் போனதை மையமாக வைத்து தொடர்ந்த ஒரு திரில்லர் நிறைந்த கிரைம் கதையாகும். காணாமல் போன அந்த பெண்ணை சீசன் 1 ன் கடைசி எபிசோடில் பிணமாக மீட்டெடுப்பர். அத்துடன் பரபரப்பான எதிர்பார்ப்புகளுடன் சீசன் 1 நிறைவடைந்து விட்டது. தற்போது அதன் தொடக்கம் சீசன் 2 ல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Thank you for all the love for Season 1. #Suzhal now returns for Season 2 on…
— Pushkar&Gayatri (@PushkarGayatri) February 11, 2025
FEB 28TH !!!#SuzhalS2OnPrime#SuzhalTheVortex#SuzhalOnPrime@PrimeVideoIN@wallwatcherfilm @am_kathir @aishu_dil@bramma23 @sarjun_km @SamCSmusic #Lal #Saravanan @mohan_manjima@Gourayy… pic.twitter.com/1V7l01Rflh
சூழல் – தி ஓர்ட்டெக்ஸ் சீசன் 2 ல் மேலும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இதன் ட்ரைலர் மூலம் இதில் 8 பெண்கள் இந்த கொலையில் ஏதோ சம்மந்தம் இருப்பவர்கள் போல் நடித்துள்ளனர். சீசன் 1 ஐ தொடர்ந்து எடுக்கப்பட்ட சீசன் 2 ல் மேலும் திடுக்கிடும் திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்து, பார்வையாளர்கள் ஆவலுடன் சலிப்பில்லாமல் பார்க்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெப் சீரிஸ் பிப்ரவரி 28 ல் அமேசான் ப்ரைம்மில் வெளியாகவுள்ளது.
சூழல் தி ஓர்ட்டெக்ஸ் படக்குழு
நடிகர்கள் | கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால், சரவணன், மஞ்சிமா மோகன், ‘கயல்’ சந்திரன், கௌரி ஜி கிஷன், சம்யுக்தா வியோலா விஸ்வநாதன், மோனிஷா ப்ளெஸ்சி, ரினி, ஸ்ரீஷா, அபிராமி போஸ், கலைவாணி பாஸ்கர், அஷ்வினி நம்பியார், சந்தினி தமிழரசன். |
இயக்குனர்கள் | பிரம்மா & அனுசரண் முருகையன் |
தயாரிப்பு | வால்வாட்சர் பிலிம்ஸ் |
எழுத்தாளர்கள் | புஷ்கர்& காயத்ரி |
இசை | ஷாம் சி எஸ் |
வெளியீட்டு தேதி | 28 பிப்ரவரி 2025 |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]