Home Cinema News அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் வில்லனாக மிரட்ட 2 பாலிவுட் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் வில்லனாக மிரட்ட 2 பாலிவுட் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை!

by John Kamalesh

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித், ‘விடாமுயற்சி, குட் பேட் அக்லி’ என இரண்டு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இதில் ‘குட் பேட் அக்லி’ படத்தை ‘மார்க் ஆண்டனி’ புகழ் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கிறார்.

GIojNqFaIAEwbOQ 3

இந்த படத்தில் அஜித் ட்ரிபிள் ஆக்ஷனில் வலம் வந்து மாஸ் காட்டப்போகிறாராம். இதில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் சுனில் நடிக்கப்போகிறார்.

‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு வருகிற ஜூன் 13-ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கவுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் நடிக்க பாலிவுட் நடிகர்களான ஜான் ஆப்ரஹாம் மற்றும் பாபி தியோல் ஆகிய இருவரிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாபி தியோல் இப்போது சூர்யாவின் ‘கங்குவா’விலும் வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.