Home Cinema News பாலியல் தொல்லை நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் நடிக்க தடை. நடிகர் சங்கம் அதிரடி தீர்மானம்.

பாலியல் தொல்லை நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் நடிக்க தடை. நடிகர் சங்கம் அதிரடி தீர்மானம்.

தற்போது சினிமா உலகில் பூதாகரமான விஷயமாக பேசப்படுவது, அனைத்து மொழிகளிலும் பாலியல் தொல்லை இருந்தது என்று தான். தமிழ் திரையுலகில் அதனை தடுக்கும் நோக்கில் நடிகர் சங்கம் சார்பாக சில தீர்மானங்கள் கொண்டுவந்துள்ளது.  

by Sudhakaran Eswaran

தற்போது சினிமா உலகில் பூதாகரமான விஷயமாக பேசப்படுவது, அனைத்து மொழிகளிலும் பாலியல் தொல்லை இருந்தது என்று தான். தமிழ் திரையுலகில் அதனை தடுக்கும் நோக்கில் நடிகர் சங்கம் சார்பாக சில தீர்மானங்கள் கொண்டுவந்துள்ளது.  

மலையாள திரையுலகில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டதன் விளைவாக பல நடிகைகள் சினிமா வாழ்வில் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். மேலும் இது சம்மந்தமாக சில நடிகர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை காரணமாக மலையாள நடிகர்கள் சங்க தலைவராக இருந்த மோகன் லால் உட்பட நிர்வாகக் குழுவினர் 17 பேர் ராஜினாமா செய்தனர். இந்த விஷயம் ஒட்டுமொத்த திரைத்துறையிலும் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

தமிழ் திரையுலகிலும் இத்தகைய பிரச்சனையை எதிர்கொண்டதாக சில நடிகைகள் கூறி வந்தனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக கடந்த 22.4.2019 அன்று SIAA-GSICC கமிட்டி என்று நடிகர் சங்கம் சார்பில் உருவாக்கப்பட்டது. தற்போது தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனைக் கூட்டம் தி.நகர், நாம் பவுண்டேஷன் அரங்கில் நடைபெற்றது. 

அதில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி ஆகியோருடன் கமிட்டி தலைவர் ரோகிணி தலைமையில் உறுப்பினர்களான சுஹாசினி, குஷ்பூ , லலிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி போன்றோர் கலந்து கொண்டனர். 

பாலியல் வன்கொடுமை குறித்து பாதிக்கப்பட்டவர் நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கும் பட்சத்தில் புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர் விசாரிக்கப்பட்டு, புகாரில் உண்மை இருக்குமானால் அவர்கள் 5 ஆண்டுகளுக்கு திரைத்துறையில் பணியாற்றுவதற்கு தடை விதிக்கப்படுவார்கள். இதற்காக தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SaveClip.App 458247269 486242167629942 7276715022262082881 n

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிப்பது முதல் அவர்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் தென்னிந்திய நடிகர் சங்கம் செய்து தரும். பாதிக்கப்படுபவர்கள் புகாரளிக்க தனி தொலைப்பேசி எண் மற்றும், இமெயிலும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் கமிட்டியிடம் புகார் அளிக்கலாம் என்றும், மீடியாக்களில் பேசுவதை தவிர்க்கவும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்று 7 தீர்மானங்கள் நடிகர் சங்கம் சார்பில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தீர்மானங்கள்:

1. பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் குற்றம் புரிந்தவர்களை விசாரித்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில், அவர்கள் 5 ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

2. பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் தருவதில் இருந்து அவர்களுக்கு சட்டரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும்.

3. பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்படும். பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

4. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக தனி தொலைபேசி எண் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. தற்போது இ -மெயில் மூலமாக புகார் அளிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

5. பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டி மூலம் தங்கள் புகார்களை அளிக்கவும். அதை விடுத்து நேரடியாக மீடியாக்களில் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

6. யூடியூபில் திரைத் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பதிவிடப்படுவதால் பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைம் பிரிவு காவல் துறையில் புகார் அளித்தால் கமிட்டி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

7. மேலும் கமிட்டியின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் நேரடியாக கண்காணிக்கும்” என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

09/09/2024

நடிகர் சங்க சந்திப்பு நிகழ்வில் நடிகை ஷர்மிளா பேட்டியளித்தார். தமிழ் சினிமாவில் இப்படியான பாலியல் சீண்டல்கள் இல்லை என்றும், இங்கு ஹேமா கமிட்டி அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார். சில நாட்களுக்கு முன் மலையாள சினிமாவில் தன்னை 25 நபர்கள் சூழ்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை ஷர்மிளா கூறியது குறிப்பிடத்தக்கது.

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.