செப்டம்பர் 7 இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகை காலம் என்றாலே முன்பெல்லாம் புதிய ஆடை, பலகாரம், கொண்டாட்டம் என கலைகட்டும். இந்த கொண்டாட்டத்தின் முக்கிய பங்கு நமது தொலைக்காட்சியும் அதில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளும் வகிக்கும். ஆனால் காலம் மாற மாற நமது கொண்டாட்டமும் மாறி விட்டது. நிகழ்ச்சிகள் அனைத்தும் நாடகங்களாக மாறியது, OTT தளத்திலேயே புது படங்களை கண்டு வருகிறோம். ஆனால் இன்னும் இந்த மாற்றத்திற்கு உள்ளாகாத மக்கள் இருப்பதால் புது படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது ஆர்வத்தை தூண்டுவதாகவே உள்ளது.
முன்னணி தொலைக்காட்சியான சன் டிவியில் எந்த ஒரு புது படத்தின் அறிவிப்பும் வெளியிடவில்லை. அதற்கு அடுத்தபடியாக உள்ள விஜய் டிவியில் காலை 10 மணிக்கு ஜி.வி.பிரகாஷ், பாரதிராஜா, இவானா நடித்த “கள்வன்” திரைப்படம் ஒளிபரப்பாகிறது. இந்த படத்தின் இயக்குனர் பி.வி.சங்கர், பாடல்கள் ஜி.வியின் இசையிலும், பின்னணி இசை ரேவா என்பவர் இசையிலும் அமைந்துள்ளது.
கலைஞர் தொலைக்காட்சியில், மதியம் 1.30 மணிக்கு இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான “நீலம் productions” தயாரிப்பில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள் நடித்த “Blue Star” ஒளிபரப்பாகிறது. 90-களில் நடக்கும் கதை களமாக இந்த படம் அமைந்துள்ளது. “96” படத்தின் மூலம் எல்லா ரசிகர்களின் மனதிலும் “Life of Ram” ஆக ஒலித்து கொண்டிருக்கும் கோவிந்த் வசந்தா தான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இயக்குனர் S. ஜெயகுமாருக்கு இதுவே முதல் படம் ஆகும்.
ஜீ தமிழில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது “Star” திரைப்படம். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்ற நடிகர் கவினுக்கு இந்த படம் பெரிய வாய்ப்பாக அமைந்தது. யுவன் சங்கர் ராஜா இசையில் “பியார் பிரேமா காதல்” படத்தின் இயக்குனர் எழில் இந்த படத்தை இயக்கியுள்ளார். வர்த்தக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நடிகர் கவினுக்கு நிறைய பாராட்டைப் பெற்று தந்தது. இந்த படத்தில் நடித்த லால், மாறன், கீதா கைலாசம், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் மிகப்பெரிய பலமாக கருதப்பட்டனர். யுவன் இசையில் ‘புதுப்பேட்டை’ படத்தில் வெளியான “ஒரு நாளில்” என்ற நா.முத்துக்குமார் அவர்களின் வரிகளில் உருவான பாடல் இந்த படத்திற்கு trademark ஆக மாறியது. இந்த பாடல் வெளியாகி 18 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் புதுமையாக, புலமை மிக்கதாகவே ரசிகர்களுக்கு உள்ளது.
விஜய் சூப்பர்-இல் காலை 9 மணிக்கு மலையாள டப்பிங் திரைப்படமான “பிரேமலு” ஒளிபரப்பாகிறது. நஸ்லேன், சங்கீத் பிரதாப், மமிதா பைஜூ, மாத்தியூ தாமஸ் ஆகியோர் நடித்து வெளியான இந்த படம் மலையாளத்தை தாண்டி தமிழ் மற்றும் தெலுங்கு திரை அரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தொலைக்காட்சி பெயர் | படம் | ஒளிபரப்பாகும் நேரம் |
விஜய் டிவி | கள்வன் (Kalvan) | காலை 10 மணி |
கலைஞர் டிவி | Blue Star | மதியம் 1.30 மணி |
விஜய் சூப்பர் | ப்ரேமலு (Premalu) | காலை 9 மணி |
ஜீ தமிழ் | ஸ்டார் (Stat) | மதியம் 2 மணி |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com