Home Cinema News ‘AK64’ படத்தின் இயக்குனர் இவராக இருக்குமா?! 

‘AK64’ படத்தின் இயக்குனர் இவராக இருக்குமா?! 

‘AK64' படத்தின் இயக்குனர் தேர்வு- இரண்டு முன்னனி இயக்குனர்கள் இயக்க வாய்ப்பு. 

by Vinodhini Kumar

‘AK64′ படத்தின் இயக்குனர் தேர்வு- இரண்டு முன்னனி இயக்குனர்கள் இயக்க வாய்ப்பு. 

‘AK64’, அதாவது நடிகர் அஜித் குமாரின் 64வது படம், விடாமுயற்சி மற்றும் Good Bad Ugly படங்களுக்கு பின் அவர் நடிக்க உள்ள படத்தை இயக்க‌போவது இயக்குனர் மோகன் ராஜா என பேசப்படுகிறது. தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் Good Bad Ugly படத்தில் பிசியாக நடித்து வரும் நடிகர் அஜித் குமார், அடுத்த படத்தின் கதையை கேட்க இயக்குனர்களிடம் பேசி வருகிறார். 

AK Vidamuyarchi

ஏற்கனவே பல படங்களில் இணைந்து வேலை செய்த இயக்குனர் சிறுத்தை சிவா அவர்கள் நடிகர் அஜித் குமாரிடம் ‘AK64’ படத்திற்காக​ கதை ஒன்றை கூறியதாக கூறப்பட்டது. ஆனால் அதை பற்றிய உண்மை தகவல் கிடைக்கவில்லை. தற்போது பிரபல இயக்குனர் மோகன் ராஜா ஒரு கதையை விவரித்ததாகவும், அந்த கதை நடிகர் அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் பேசப்படுகிறது. இந்த கதை பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட வாய்ப்புகள் உண்டு என்றும் கூறப்படுகிறது. 

தமிழ் சினிமாவின் “தனி ஒருவன்” MOHAN RAJA…

Director Mohanraja

இயக்குனர் சிறுத்தை சிவா சொன்ன கதை நடிகர் அஜித்தின் 65வது படமாக அமையும் எனவும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் இயக்குனர் வெற்றிமாறன் அஜித்திடம் படத்திற்காக​ கதை சொல்ல இருப்பதாகவும், இனிமேல் தான் அதை பற்றிய தகவல் வெளியாகும் எனவும் தெரிகிறது. இயக்குனர் வெற்றிமாறன் இப்போது நடிகர் சூரியுடன் விடுதலை இரண்டாம் பாகம், நடிகர் சூர்யாவுடன் வாடிவாசல் படத்திலும் மும்முரமாக வேலை செய்வது குறிப்பிடத்தக்கது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.