ரொமாண்டிக் ஹீரோ Ashok Selvan நடித்திருக்கும் புதிய படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
Ashok Selvan தற்போதைய தமிழ் சினிமாவில் ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வருகிறார். அவரின் திரை பயணம் துணை பாத்திரங்கள், டிடக்டிவ் த்ரில்லர் என ஆரம்பித்து இருந்தாலும், தற்பொழுது அவர் ஒரு அக்மார்க் காதல் மன்னனாக நடித்து வருகிறார். தன்னுடைய முதல் படமான ‘தெகிடி’யில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக ஆரம்பித்து பின்னர் பல காதல் படங்களில் அசத்தி வருகிறார்.
My film #EmakkuThozhilRomance trailer is here. Happy that this film is releasing after 8 long years. Especially Happy for my director #BalajiKesavan . My love to @nivaskprasanna and @Avantika_mish . ETR is a feel good family entertainer. Releasing soon!https://t.co/NGS3OBg5Zl…
— Ashok Selvan (@AshokSelvan) May 17, 2024
அவரின் அடுத்த படமான ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ன் டிரெய்லர் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்தில் சினிமாவில் படமெடுத்து சாதிக்க நினைக்கும் வாலிபனாக நடிக்கிறார். நிஜத்தில் காதலில் விழுந்து தன் கனவையும் காதலையும் சமாலிக்கிறாரா? என்பது கதை. இயக்குனர் பாலாஜி கேசவனின் இரண்டாவது படமான ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ல் அவந்திகா மிஷ்ரா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் முன்னணி நடிகையான ஊர்வசி நடித்துள்ளார். அழகம் பெருமாள், குணச்சித்திர நடிகர் எம் எஸ் பாஸ்கர், படவா கோபி என பலர் நடித்துள்ளார்கள்.

‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ படத்தின் இசை நிவாஸ் கே பிரசன்னா. இவர் ஏற்கனவே ‘தெகிடி’ படத்தில் அற்புதமான ட்ரெண்டிங் பாடல்களை தந்தவர். ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா, மோகன் ராஜன் பாடல்களை எழுதியுள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் ‘பாக்குரா தாக்குரா’ வெளியானது. Ashok Selvan-ன் மற்றுமொரு துள்ளலான ரொமான்ஸ் படமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]