தங்களுடைய நகைச்சுவையான பேச்சாலும் நடிப்பாலும் தமிழ் ரசிகர்களை சிரித்து திக்குமுக்காட வைத்த பல comedy கலைஞர்கள் படத்தின் கதைக்கு ஏற்ப துணை பாத்திரங்கள் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பார்ப்பவர்களை திகைப்பில் ஆழ்த்தியது உண்டு. அவ்வாறு தமிழ் சினிமாவில் மாறுபட்ட ஆற்றலை வெளிப்படுத்தி வெற்றி கண்டவர்கள் இவர்கள்.
நாகேஷ்

சினிமாவை அதன் சாராம்சத்தில் இருந்து ஆராய்ந்து, பின் தொடரும் வருங்கால தலைமுறை நகைச்சுவை நடிகர்களுக்கு வழிவகுத்தவர். ஹீரோவாகவோ துணை கதாபாத்திரமாகவோ படத்தை வழிநடத்தும் கதாபாத்திரங்களை எளிதாக தனதாக்கிய நகைச்சுவை மேதை. நகைச்சுவை பற்றிய அவரது தெளிவும் ஒரு நடிகராக அவரிடம் இருந்த புரிதலும் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இடத்தை அவருக்கென எப்போதும் விதித்திருக்கும்.
விவேக்

நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாது சமூக சீர்திருத்த பணிகளிலும், மூடத்தனமான எண்ணங்களையும் தன்னுடைய இயல்பான comedy -யின் நடுவே எளிதாக நுழைத்தவர். கலைவாணரை தொடர்ந்து சமூக அக்கறையுடன் கவனமான நகைச்சுவை கலைஞராக கோலாச்சியவர் நடிகர் விவேக். அவரின் கண்ணியமான நடிப்பும், comedy ம் ரசிகர்களால் இந்த மூடநம்பிக்கைகள் அழியும் வரை கொண்டாடப்படும்.
மணிவண்ணன்

நக்கல் நையாண்டி, கிண்டல் கலந்த நகைச்சுவையால் முன்னணி நடிகர்களுக்கு மத்தியில் பல குணச்சித்திர வேடங்களை தன் வசம் ஈர்த்தவர் நடிகர் மணிவண்ணன். அவர் கவனமாக வைக்கப்படும் அரசியல் கிண்டல்கள் பல இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு பொருந்தும். அவரின் அளவில்லா திரை தாக்கம் பிரபலமான ஹீரோக்கள் மத்தியில் கூட அவருக்கான இடத்தைப் பிடிக்க முடிந்தது.
வடிவேலு

நாகேஷுக்குப் பிறகு அவரது நகைச்சுவையான முகபாவனைகள் மற்றும் கூச்சமற்ற உடல் தோரணைகள் மூலம் உடல் நகைச்சுவைக்கு உயிர் கொடுத்த நடிகர் வடிவேலு. அவர் கண்ணீர் மல்க உணர்ச்சிகளை தூண்டவும் ஆற்றல் பெற்றவர் என்பது சமீபத்தில் வந்த மாமன்னன் படத்தில் கூட நிரூபணம் ஆனது. இன்றைய இளைய சமுதாயம் வரை மீம்கள் மூலம் எளிதாக கோலாச்சி வருகிறார்.
யோகி பாபு

தொடக்கத்தில் உருவ குளிக்கும் அதை சுற்றி உருவாகும் நகைச்சுவைக்கும் ஆளான யோகி பாபு, மண்டேலா என்ற படத்தின் மூலம் உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார். தேவையான நேரங்களில் நகைச்சுவையும் தேவைக்கு ஏற்ப தத்ரூபமான எதார்த்தமான சீரியஸான காட்சிகளையும் நடித்து அவரை நகைச்சுவை நடிகராக மட்டும் ஒதுக்கி வைத்துவிட முடியாது என நிரூபித்துள்ளார்.
மனோரமா ஆச்சி

தனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பாத்திரங்களையும் அநாயாசமான நடித்து, அவரின் திறமைக்கு எல்லையில்லை என்று தெரியபடுத்தியவர் ஆச்சி மனோரமா. அவர் ஏற்று நடித்து பல பாத்திரங்களை உயிர்ப்பித்து உள்ளார். நகைச்சுவையை தாண்டி காலம் கடந்த அவரின் அர்ப்பணிப்பு, தென்னிந்தியத் திரையுலகிற்கு ஒரு நிரந்தரப் பெருமை
கோவை சரளா

துள்ளலான, ஆரவாரமான comedyயாக இருந்தாலும் முழு நீளப் படத்தில் துணை பாத்திரமாக இருந்தாலும் தனக்கான பங்கை அழகாக நிறைவேற்றும் திறமைக்கு சொந்தகாரர். மிரட்டலான நகைச்சுவையை ஒரு காட்சியிலும், பண்பட்ட நடிப்பை மறு காட்சியிலும் நடிக்கும் ஆற்றல் கொண்ட நடிகை. இவரின் திறமைக்கு சமீபத்தில் வெளியான முற்றிலும் மாறுபட்ட பாத்திரங்கள் தான் சான்று.
ஊர்வசி

படத்தின் கதையில் சில நிமிடங்கள் வந்தாலும் அதில் நடிகை ஊர்வசியின் காட்சிகள் தனித்துவமாக இருக்க காரணம், அவரிடம் எளிதாக உள்ள நகைச்சுவை தன்மை. கதாநாயகியாக ஆரம்பித்து பின்னர் உடன் நடிக்கும் நடிகர்களுடன் comedyக்கு தேவையான பிணைப்பை ஏற்படுத்தி இரண்டு விதமான பாத்திரங்களையும் அசத்தலாக நடித்து வருபவர். அவரது பிந்தைய இன்னிங்ஸ் நகைச்சுவை மற்றும் தீவிரமான நடிப்பு ஆகியவற்றின் கலவையாக அமைந்துள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]