Home Cinema News 2024 Dhanush-ன் வரிசையான படங்கள்! 

2024 Dhanush-ன் வரிசையான படங்கள்! 

நடிகர் Dhanush நடிக்கும் படங்களின் அடுத்தடுத்த அப்டேட். ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட். 

by Vinodhini Kumar

நடிகர் Dhanush நடிக்கும் படங்களின் அடுத்தடுத்த அப்டேட். ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட். 

நடிகர் தனுஷ், நடிப்பையும் தாண்டி இயக்கம், எழுத்து, பாடல் என எல்லா துறையிலும் கைதேர்ந்தவர் என்பது அறிந்ததே. 2024ல் நடிகர் தனுஷ் தீவிரமாக பல படங்களில் கையெழுத்திட்டு நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் தன்னுடைய 50வது படமான ‘ராயன்’ தானே நடித்து இயக்கியும் வருகிறார். 

Dhanush in Kubera

குபேரா படத்தில் நடித்து வரும் Dhanush, மும்பையில் நடந்த படப்பிடிப்பில் அசத்தலாக நடித்ததை அவருடன் நடித்த தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா சமீபத்தில் கூறினார். தற்போது ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. அந்த படப்பிடிப்பு முடிந்ததும் தனுஷ் தான் இயக்கும் ‘ராயன்’ படத்தின் கடைசி கட்ட எடிட்டிங் மற்றும் பிற வேலைகளை பார்த்துள்ளார். ‘ராயன்’ படத்தின் தயாரிப்பாளர்கள்- சன் பிக்சர்ஸ் நிறுவனமும் படத்தின் காட்சிகளால் மகிழ்ச்சி அடைந்தார்களாம். ஜூன் 13 ஆம் தேதி ‘ராயன்’ படம் வெளியாக உள்ளது. 

Raayan movie last schedule

‘ராயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குபேரன் படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் முடிக்கவும் திட்டமிட்டுள்ளார் நடிகர் தனுஷ். இந்த இரண்டு படங்களின் வேலைகளும் முடித்துவிட்டு இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க முனைப்புடன் உள்ளார் நடிகர் தனுஷ். 

மொத்தத்தில் நடிகர் தனுஷுக்கு 2024 அமோகமாக அமைந்துள்ளது‌. அவரின் தீவிர ரசிகர்களும் அவரை திரையில் அடுத்தடுத்த காண ஆவலாக காத்திருக்கிறார்கள். 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.