Home Cinema News GOAT படத்தில் இணைகிறார் நடிகர் யுகேந்திரன்! 

GOAT படத்தில் இணைகிறார் நடிகர் யுகேந்திரன்! 

நடிகர் விஜய் நடிக்கும் GOAT படத்தில் இணைகிறார் பின்னனி பாடகரும் நடிகருமான யுகேந்திரன்.

by Vinodhini Kumar

நடிகர் விஜய் நடிக்கும் GOAT படத்தில் இணைகிறார் பின்னனி பாடகரும் நடிகருமான யுகேந்திரன்.

GOAT படம் தீவிரமாக படமாக்கப்பட்டு வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு இந்த படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்று டீ ஏஜிங் அதாவது இளமையாக காட்டும் கிராஃபிக்ஸ் நுட்பத்தை படத்தில் பயன்படுத்த போவதாக தகவல் வந்தது. இதை அடுத்து நடிகர் வைபவ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். அவரிடம் சமீபத்தில் கேட்ட கேள்விக்கு படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து உள்ளதாகவும் கூறியுள்ளார். 

GOAT VFX Work image

வெங்கட் பிரபு தன்னுடைய படங்களை இயல்பாகவே காமெடி, கலாட்டா என பக்கா எண்டர்டெயின்மெண்ட் படமாக எடுப்பது வழக்கம். இந்த படமும் ஒரு முழு எண்டர்டெயின்மெண்ட் படமாக வரும் எனவும் நடிகர் வைபவ் கூறியுள்ளார். இந்த படத்தின் அடுத்த அப்டேட் கிடைத்துள்ளது. 

Yugendran and Vijay

நடிகர் விஜய்யுடன் 18 வருடங்களுக்கு பிறகு இணைகிறார் நடிகரும் பாடகருமான யுகேந்திரன். இவர் 2000ங்களின் தொடக்கத்தில் பல படங்களில் துணை பாத்திரங்களில் நடித்திருப்பார். நடிப்பில் இருந்து ஒரு இடைவேளைக்கு பின் இப்போது இந்த​ படத்தில் நடிப்பது அவரின் கம் பேக் படமாகும். விஜயுடன் யூத் மற்றும் திருப்பாச்சி படங்களில் நடிகர் யுகேந்திரன் மறக்கமுடியாத பாத்திரத்தில் பார்த்திருப்போம். தற்போது GOAT படத்தில் ஒரு வில்லத்தனமான பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் செய்தி கிடைத்துள்ளது. 

இயக்குனர் வெங்கட் பிரபு இந்த​ படத்தை பற்றி பெரிதாக அப்டேட் கொடுக்கவில்லை என்றாலும் சமீபத்தில் நடிகர் விஜயின் புகைப்படங்கள் மற்றும் படப்பிடிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளதாகவும், விநாயகர் சதுர்த்தி அன்று செப்டம்பரில் படம் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்து இருந்தது. நடிகர் யுகேந்திரன் மட்டுமல்லாமல் நடிகர் பிரசாந்த் ஆக்கும் இந்த படம் ஒரு கப் பேக் படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.