நடிகர் அஜித் குமார் நடிக்கும் Good Bad Ugly படத்தின் ஹீரோயின் நயன்தாரா என தகவல் பரவி வருகிறது.
Good Bad Ugly, நடிகர் அஜித் குமார் தற்போது நடித்து வரும் ஆக்ஷன் படம். இந்த படத்தின் கதாநாயகியாக நடிப்பது சிம்ரன் என்றும் நடிகை மீனா என்றெல்லாம் சொல்லி வந்த நிலையில், தற்போது நடிகை நயன்தாரா இந்த படத்தின் கதாநாயகி என பரவலான செய்தி. இந்த படத்தின் முதல் போஸ்டரில் சர்ச்சைக்குறிய விஷயங்கள் இருந்தாலும் அது சமூக வலைதளங்களில் வெளியான சில மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட போஸ்டர் என்ற சாதனையை செய்துள்ளது.
![Good Bad Ugly படத்தின் கதாநாயகி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவா? 2 Good Bad Ugly poster](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/05/Good-Bad-Ugly-1-678x1024.jpeg)
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் முன்னணி நடிகர் அஜித் குமாரின் பிசியான நேரத்தை கருத்தில் கொண்டு வேகமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இதனை அடுத்து Good Bad Ugly படத்தில் நடிப்பவர்கள் பற்றி பெரிதாக தகவல் ஏதும் இல்லை. படத்தின் நாயகியாக நயன்தாரா நடிப்பதாக இன்று பேசப்படுகிறது.
![Good Bad Ugly படத்தின் கதாநாயகி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவா? 3 Nayanthara](https://www.kollywoodglam.com/wp-content/uploads/2024/05/Snapinsta.app_438558705_948434090260469_9175099709795885383_n_1080-819x1024.jpg)
நடிகர் அஜித் மற்றும் நடிகை நயன்தாரா நான்கு முறை ஒன்றாக நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகை நயன்தாரா இணைந்தால் இது இந்த இருவருக்கும் ஐந்தாவது திரைப்படமாக அமையும். ஏற்கனவே பல ஹிட் கொடுத்த இருவரையும் தன்னுடைய படத்தில் இணைந்து மற்றுமொரு வெற்றி படத்திற்கான திட்டத்தை செயலாக்குகிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் அங்கு படமாகும் காட்சிகள் முடிவடையும். அதற்கு பின் நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பை முடிக்க வெளிநாட்டுக்கு செல்வார் என தெரிகிறது. இரண்டு படங்களும் புதிய பாணியில் எடுக்கப்பட்ட உள்ளதாக தெரிகிறது. Good Bad Ugly படம் ஒரு ஃபேண்டஸி படமாக இருக்கும் என்ற தகவலும் கசிந்து வருகிறது.